Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரே நேரத்தில் ரூ.450 கோடி பட்ஜெட் படங்கள்.. சிவகார்த்திகேயனின் பராசக்தி தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

Enforcement Raid Aakash Bhaskarans House : தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் உருவெடுத்துள்ளவர் ஆகாஷ் பாஸ்கரன். இவரின் இயக்கத்தில் மட்டும் ரூ. 450 கோடி பட்ஜெட்டிற்கும் மேல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகிறது. இதன் காரணமாக இவரது வீட்டிற்கு அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. தற்போது இந்த விஷயமானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் ரூ.450 கோடி பட்ஜெட் படங்கள்.. சிவகார்த்திகேயனின் பராசக்தி தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
ஆகாஷ் பாஸ்கரன்Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 16 May 2025 17:24 PM

கோலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி பிரபலங்களான தனுஷ் (Dhanush) , சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) , சிலம்பரசன்  (Silambarasan) மற்றும் அதர்வா போன்ற முன்னணி பிரபலங்களின் படங்களைத் தயாரித்து வருபவர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் இந்த படங்களை டான் பிக்ச்சர்ஸ் (Dawn Pictures) என்ற நிறுவனத்தின் பேனரில் தயாரித்து வருகிறார். தனுஷின் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன்  (Akash Bhaskaran) வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு (Enforcement Directorate ) நடத்தி வருகிறது. சமீபத்தில் டாஸ்மார்க் நிறுவனத்தில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துவந்து நிலையில், கடந்த 2025, மார்ச் மாதம் முதல் தனியார் அலுவலகங்கள், தனியார் தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து தற்போது திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களின் படங்களைத் தயாரித்து வரும் நிலையில், அந்த படங்களின் உருவாகும் கணக்கைப் பார்த்தல் சுமார் ரூ. 450 கோடி பட்ஜெட்டிற்கு மேல் வரும் நிலையில், இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனைகள் குறித்தது தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன் :

திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் சேலத்தில் பெரும் தொழிலதிபர்களின் ஒருவரான பாஸ்கரன் என்பவரின் மகன். இவர் கெவின்கேர் நிறுவனர் டி.கே ரங்கநாதனின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார். சமீபத்தில் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர் டான் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். மேலும் இயக்குனராகவும் படத்தையும் இயக்கி வருகிறார்.

டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

தயாரித்துவரும் படங்கள் :

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள நடிகர் தனுஷின் இட்லி கடை, நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம், சிலம்பரசனின் நடிப்பில் உருவாகவுள்ள STR 49 படம் மற்றும் நடிகர் அதர்வாவின் இதயம் முரளி படம் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இதில் நடிகர் அதர்வாவின் இதயம் முரளி திரைப்படத்தை இவரே இயக்கி, தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஹை பட்ஜெட்டில் உருவாகிவரும் 4 படங்களை இவர் தயாரித்து வருகிறார். இது தொடர்பாகத்தான் இவர் வீட்டில் ED சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் அமலாக்கத்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்
6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்...
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?...
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!...
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!...
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?...
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!...
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!...
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா...
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...