Ajith Kumar : ‘AK 64’ படத்தின் ஷூட்டிங் எப்போது? நடிகர் அஜித்தே கொடுத்த அப்டேட் இதோ!
Ajith Kumars AK64 Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாகக் கலக்கி வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் குட் பேட் அக்லி. இந்த வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவலை நடிகர் அஜித் கூறியுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) முன்னணி நாயகனாக நடித்திருந்தார். அஜித்தின் 63வது திரைப்படமான, குட் பேட் அக்லியில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் காமினேஷனில் இந்த படமானது எதிர்பார்த்ததை விடவும் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றிருந்தது. கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் இந்த குட் பேட் அக்லி படமானது உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் அஜித் கேங்ஸ்டராக நடித்திருந்தார். மேலும் இவருக்கு வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார். முற்றிலும் மாறுபட்ட , ரசிகர்களுக்கு ஏற்ற படமாக இது அமைந்திருந்தது. மேலும் இந்த படத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்றே கூறலாம்.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தனது 64வது படத்திலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்பாக நடிகர் அஜித் குமாரே நேர்காணலில் கூறியுள்ளார். அதன்படி அஜித்தின் 64வது படத்தின் ஷூட்டிங் , 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாம். மேலும் 2026ம் ஆண்டு கோடை விடுமுறைகளை ஒட்டி இந்த படம் வெளியாகும் என்றார் அவர் கூறியுள்ளார். தற்போது இந்த தகவலானது அஜித் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் அஜித்தின் பேட்டி பதிவு :
Ace of pace.
Ajith Sir’s interview in Indulge IE @AkracingofflClipping : @arianoarun | #AK #Ajith #Ajithkumar | #GoodBadUgly | #AjithKumarRacing | #24HSeries | #AKRacing | pic.twitter.com/se0XP9A3db
— Ajith (@ajithFC) May 16, 2025
நடிகர் அஜித் குமார் இந்த அப்டேட்டை, இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அவர் இயக்குநர் யார் என்று குறிப்பிடவில்லை. மேலும் அஜித் குமார் இதில் எனது விருப்பமான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் கூட்டணியில் உருவாக்கவுள்ள 64 படத்தில் வரும் 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடிக்கவிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் அஜித்தின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் என்றால் குட் பேட் அக்லி. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் நடிகர் அஜித் தனது 64வது படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான் இசையமைக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.