Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar: 8 மாதத்தில் 42 கிலோ குறைத்தேன்… டீடோட்டலரா மாறிட்டேன் – மனம் திறந்த அஜித்

Ajith's Fitness Journey : நடிகர் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் 8 மாதங்களில் 42 கிலோ எடை குறைத்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் சைவம் மட்டுமே சாப்பிடுவதாகவும் டீட்டோட்டலராக மாறியதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் தனது அடுத்த படம் தொடர்பான அப்டேட்டையும் அவர் வழங்கியிருக்கிறார்.

Ajith Kumar:  8 மாதத்தில் 42 கிலோ குறைத்தேன்… டீடோட்டலரா மாறிட்டேன் – மனம் திறந்த அஜித்
அஜித் குமார்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 16 May 2025 20:00 PM

நடிகர் அஜித் குமாருக்கும் (Ajith Kumar)  சரி அவரது ரசிகர்களுக்கும் சரி இந்த 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவரது 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. அவரது கனவான கார் ரேஸில் கலந்துகொண்டு குறிப்பிட்ட தகுந்த வெற்றிகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்திருக்கிறார். மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் (Padma Bushan) விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே அவரது ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்கள் கிடைத்தன. வெளி இடங்களுக்கு அவ்வளவாக வராத அவர் தனது திருமண நாளை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குடும்பத்துடன் ஐபிஎல் (IPL) போட்டிகளைக் காண வந்திருந்தார். மேலும் அதன் ஒரு பகுதியாக நீண்ட இடைவேளைகளுக்கு பிறகு பேட்டிகளும் அளித்து ஆச்சரியப்படுத்தி வருகிறார். இந்த ஏகேவைத் தான் நாங்கள் இவ்வளவு நாள் நாங்கள் மிஸ் செய்தோம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருந்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியில் தோல்விப்படமாக அமைந்தது. ஆனால் அதற்கு சேர்த்து வைத்தாற்போல ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 10 அன்று வெளியான குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அந்த அளவுக்கு இயக்குநர் ஆதிக் காட்சிக்கு காட்சி அஜித்தின் பழைய படங்களின் ரெஃப்ரென்ஸ்களை வைத்து அசத்தியிருந்தார்.

42 கிலோ எடை குறைத்த அஜித்

 

இந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் பங்கேற்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக அவர் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்கில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது தி நியூ இந்தியன் எஸ்க்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தனது உடல் குறைத்த ரகசியம் குறித்து பேசியிருக்கிறார். அந்த பேட்டியில், நான் மீண்டும் ரேஸில் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்தபோது நான் மீண்டும் ஃபிட்டாக மாற வேண்டும் என முடிவு செய்தேன். கடந்த ஆகஸ்ட் 2024 ஆண் ஆண்டிலிருந்து தற்போது வரை 8 மாதங்களில் 42 கிலோ எடை குறைத்திருக்கிறேன்.

குறைவான அளவு உணவு எடுத்துக்கொள்வது, அதற்கேற்ற டயட், நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டேன். நான் டீட்டோட்டலராக மாறினேன். மேலும் சைவ உணவுக்கு மாறினேன். இதையெல்லாம் நான் கடுமையாக மேற்கொண்டேன் காரணம் நான் ரேஸில் கலந்துகொள்ள ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக என்று குறிப்பிட்டார்.

நடிகர் அஜித்தின் அடுத்த படம்

மேலும் அந்த பேட்டியில் தனது அடுத்த படமான ஏகே 64 குறித்த அப்டேட்டையும் வெளியிட்டிருக்கிறார். அந்த பேட்டியில் தனது அடுத்த படம் நவம்பர் 2025ல் படப்பிடிப்பு துவங்கி, 2026 சம்மரில் வெளியாகும் என அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த பேட்டியில் யார் இயக்குநர் என்பது குறித்து தகவலை தெரிவிக்கவில்லை. அவரது அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரில் ஒருவர் இயக்குவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் அஜித்தை ஒரு கதை சொன்னதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்
6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்...
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?...
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!...
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!...
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?...
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!...
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!...
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா...
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...