Cinema Rewind: விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் கொடுத்த மாஸ் பதில்!
Ajith About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றி பெற்ற படம் குட் பேட் அக்லி. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்த படங்களிலும் ஹீரோவாக கமிட்டாகவுள்ளார். இந்நிலையில் முன்னதாக அஜித் கலந்துகொண்ட நேர்காணலில் விஜய்யுடன் நடிப்பதைப் பற்றி அவர் பேசிய விஷயம் குறித்துப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவை தொடர்ந்து, தென்னிந்தியாவில் (South India) முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் அஜித் குமார் (Ajith Kumar) . இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்காகக் கதையையும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸில் (Car Race) கவனம் செலுத்தி வருகிறார். மேலும் நடிகர் அஜித் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தான் சினிமாவில் நடிப்பதற்குக் காரணமே கார் ரேஸ்தான். அதற்காக நிதியைத் திரட்டுவதற்குத்தான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன் என்று கூறியிருந்தார். நடிகர் அஜித் குமார் தமிழில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான அமராவதி (Amaravathi) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் தமிழில் நடிக்கத் தொடங்கினார். கோலிவுட் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்துப் பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை என தனித்தனியாக இருக்கின்றனர். இந்த இருவரும் எப்போது ஒன்றாக நடிப்பார்கள் என்றும் ஒரு கூட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றி விஜய்யுடன் நடிப்பதைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் அதில் விஜய்யுடன் கதை அமைந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் விஜய் ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து விலகவுள்ள நிலையில், தற்போது மீண்டும் அஜித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் விஜய்யுடன் நடிப்பதைப் பற்றிப் பேசிய விஷயம் :
முன்னதாக கலந்துகொண்ட நேர்காணலில் நடிகர் அஜித் குமாரிடம் , விஜய்யுடன் நடிப்பதைப் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருப்பார். அதற்கு நடிகர் அஜித் குமார், “விஜய்யுடன் நடிக்கவேண்டும் என்றால் முதலில் அவரின் ரசிகர்கள் ஆசைப்படணும், என்னுடைய ரசிகர்களும் ஆசைப்படவேண்டும். படத்திற்கு ஏற்ற ஸ்கிரிப்ட் அமையவேண்டும், ஒருவேளை அந்த ஸ்கிரிப்டில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கவேண்டும் என்றால் பண்ணலாம் என்று நடிகர் அஜித் குமார் அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. மேலும் அஜித் ரசிகர்களும் சரி, விஜய் ரசிகர்களும் சரி இந்த காம்போ வருமா என எதிர்பார்க்கின்றனர். ஆனால் நடிகர் விஜய் ஜன நாயகன் படத்தை தொடர்ந்து முழுவதுமாக அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இந்த ஆசையானது நிறைவேறாது என்றும் ஒருபுறம் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.