Ajith Kumar : ரேஸ் நாயகன்.. ரசிகர்கள் மத்தியில் கவனம்பெறும் நடிகர் அஜித்தின் ரீசென்ட் போட்டோஸ்!
Ajith Kumar Dubai Car Race Recent Photos : நடிகர் அஜித் குமாருக்குத் தமிழ் சினிமாவையும் தாண்டி பான் இந்தியா அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருக்கின்றனர். அந்த வகையில் அஜித்தும் படங்களைத் தொடர்ந்து கார் ரேஸ் மீது தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் குமார் சைக்கிளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரைத்துறையில் அமராவதி (Amaravati) திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நுழைந்தவர் அஜித் குமார். அந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். இந்த படங்களைத் தொடர்ந்து இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் கூட தொடங்கியது. மேலும் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் 2 படங்கள் வெளியாகியிருந்தது. முதலில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி (Vidaamuyarchi) . இந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. இந்த படமானது கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறலாம் சரிவைச் சந்தித்தது.
இந்த படத்தினை தொடர்ந்து குட் பேட் அக்லி (Good bad Ugly) கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் வெளியாகி எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருந்தது. நடிகர் அஜித் குமார் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் கடந்த 2025, ஜனவரி மாதத்தில் துபாயில் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு 3வது இடத்தை பெற்றிருந்தார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த கார் ரேஸிலும் கலந்துகொள்ளத் தொடங்கினார். இந்நிலையில் தற்போது துபாயில் தனது நண்பர்களுடன் கார் ரேஷிற்காக பயிற்சி எடுத்துவரும், நடிகர் அஜித் குமாரின் சிறப்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமாரின் வைரல் புகைப்படம் :
Track walk at Zandvoort circuit. @Akracingoffl
| #AK #Ajith #Ajithkumar | #GoodBadUgly | #AjithKumarRacing | #GT4Series | #AKRacing | #Avracing | pic.twitter.com/anWCqbFSJ0
— Ajith (@ajithFC) May 16, 2025
நடிகர் அஜித் குமார் துபாயில் கார் ரேஸில் வென்ற பிறகு, அதைத் தொடர்ந்து இத்தாலி மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் நடந்த கார் ரேஸிலும் கலந்துகொண்டு 3 மற்றும் 2வது இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றார். இதுவரை இந்தியாவின் சார்பாக வெளிநாடுகளில் நடந்த 3 போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்று பெருமை சேர்த்திருக்கிறார்.
இதை அடுத்ததாக நடிகர் அஜித் குமாருக்குத் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்ற விதத்தில் பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த 2025ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய அரசு அவருக்குப் பத்ம பூஷன் விருதை வழங்கியிருந்தது. மேலும் நடிகர் அஜித் தன்னை போல தனது மகன் ஆதிக்கையும் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது 64வது திரைப்படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அஜித் தற்போது கார் ரேஸ் போன்ற செயல்பாடுகளில் பிசியாக இருந்து வரும் நிலையில், விரைவில் AK 64 படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.