Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Soori: மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.. திட்டி தீர்த்த சூரி.. நடந்தது என்ன?

Soori Condemns Fans : தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூரி. இவரின் நடிப்பில் இன்று 2025, மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான படம் மாமன். இந்த படம் வெற்றிபெற மதுரையில் ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் குறித்து நடிகர் சூரி ஆதங்கமாகப் பேசியுள்ளார்.

Soori: மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.. திட்டி தீர்த்த சூரி.. நடந்தது என்ன?
நடிகர் சூரிImage Source: Social Media
barath-murugan
Barath Murugan | Published: 16 May 2025 15:42 PM

கோலிவுட் சினிமாவில் நகைச்சுவை நடிகனாக நுழைந்து, தற்போது படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வருபவர் சூரி (Soori) . விடுதலை பார்ட் 1 (Viduthalai ) படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்துள்ள 4வது படம்தான் மாமன் (Maaman) . இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் விமலின் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற விலங்கு என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இதை அடுத்து நடிகர் சூரியின் நடிப்பில் இயக்கி வந்த படம் மாமன். இந்த படத்தின் கதையை நடிகர் சூரிதான் எழுதியுள்ளார். மேலும் படத்தின் வசனங்கள் மற்றும் இயக்கம் போன்ற விஷயங்களை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் செய்துள்ளார். இந்த படமானது இன்று 2025, மே 16ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படம் வெற்றி பெறுவதற்காக மதுரையில் ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டனர். இது தொடர்பாக நடிகர் சூரி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நடிகர் சூரி இது போன்ற முட்டாள் தனமாகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தனது ரசிகராக இருப்பதற்குத் தகுதி இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர் பேசியதை விவரமாகப் பார்க்கலாம்.

நடிகர் சூரி ரசிகர்கள் குறித்து ஆதங்க பேச்சு :

அந்த பேட்டியில் நடிகர் சூரி, “இந்த மாமன் படம் வெற்றிபெறுவதற்காக, மதுரையில் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டுள்ளார்கள், அவர்களை எனது தம்பிகள் என்று கூறுவதற்கு வெட்கமாக இருக்கிறது. தம்பிகளா இதுபோன்ற செயலானது முட்டாள்தனம். எனது படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். அதை விட்டுவிட்டு மண்சோறு சாப்பிட்டால் திரைப்படம் எவ்வாறு எடுத்தாலும் ஓடிவிடுமா?. இந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனையைக் கொடுக்கிறது.

அந்த மண் சோறு சாப்பிட்ட காசிற்கு நான்குபேருக்குத் தண்ணீர், மோர் அல்லது சாப்பாடு எதாவது வாங்கி கொடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எனது ரசிகர்களாக இருப்பதற்கும் கூட தகுதியற்றவர்கள்” என்று நடிகர் சூரி ஆதங்கமாகப் பேசியுள்ளார். தற்போது இந்த தகவல்களானது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் சூரியின் மாமன் படமானது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் முழுவதும் எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் ஜோடியின் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாகச் சூரியின் இந்த படம் பேமிலி என்டேர்டைமென்ட் படமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...
முடி வளர்ச்சிக்காக ஓமத்தை எப்படி பயன்படுத்துவது? நன்மைகள் என்ன?
முடி வளர்ச்சிக்காக ஓமத்தை எப்படி பயன்படுத்துவது? நன்மைகள் என்ன?...
10 ஆம் வகுப்பு பொத்துதேர்வில் தேர்ச்சி பெற்ற 70 வயது முதியவர்!
10 ஆம் வகுப்பு பொத்துதேர்வில் தேர்ச்சி பெற்ற 70 வயது முதியவர்!...
IPL 2025 : டெல்லி அணியில் மீண்டும் இணையும் முஸ்தஃபிஸூர்?
IPL 2025 : டெல்லி அணியில் மீண்டும் இணையும் முஸ்தஃபிஸூர்?...
ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடலாமா?
ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடலாமா?...
மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அதிமுக அறிவிப்பு
மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அதிமுக அறிவிப்பு...
மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் - அரசு!
மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் - அரசு!...
8 மாதத்தில் 42 கிலோ குறைத்தேன்... டீடோட்டலரா மாறிட்டேன் - அஜித்
8 மாதத்தில் 42 கிலோ குறைத்தேன்... டீடோட்டலரா மாறிட்டேன் - அஜித்...
ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம்!
ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம்!...