Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. அதிமுக தலைமை அறிவிப்பு!

AIADMK Announced District Secretaries Meeting | 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, 2025 மே 29, 30 ஆகிய தேதிகளில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. அதிமுக தலைமை அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 16 May 2025 20:53 PM

சென்னை, மே 16 : 2025, மே மாத இறுதியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் (District Secretaries Meeting) நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து அலோசனை மேற்கொள்ளப்படும் என்று கட்சி தலைமை கூறியுள்ளது. இந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து வெளியான அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026-ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தமிழ்நாடு அரசு – கட்சிகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கட்சிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி அமைப்பது, கூட்டணி பேச்சுவார்த்தை, கட்சி உட்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

2021 சட்டமன்ற தேர்தலை சந்தித்த திமுக கூட்டணியில் எந்தவித மாற்றாமும் ஏற்படாத நிலையில், பிளவு பட்ட அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலை விடவும் இந்த சட்டமன்ற தேர்தல் சற்று சவால் மிக்கதாக உள்ளது. காரணம் இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK – Tamilaga Vetri Kazhagam) களம் காண உள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் விஜய் வருவார் என முடிவுகள் வெளியானது. இது அரசியல் களத்தை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், 2025 மே மாத இறுதியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மே 29, 2025 மற்றும் மே 30, 2025 ஆகிய தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்
6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்...
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?...
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!...
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!...
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?...
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!...
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!...
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா...
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...