Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு?.. திருப்பூரில் புதிய சர்ச்சை!

Tirupur Water Tank Contamination Accusation Issue | வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதேபோல மீண்டும் திருப்பூரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு?.. திருப்பூரில் புதிய சர்ச்சை!
கோப்பு புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 16 May 2025 18:45 PM

திருப்பூர், மே 16 : திருப்பூரில் மாநகராட்சிக்கு (Tirupur Corporation) உட்பட்ட பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருப்பூரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருப்பூர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலப்பு?

தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வேங்கைவயலில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நீதிமன்றமும் கடுமையாக சாடியது. வேங்கைவயல் விவகாரத்திலேயே இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது அதேபோன்ற மேலும் ஒரு சம்பவம் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் மாநகராட்சியின் பராமரிப்பில் 17.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்த தொட்டியை அந்த பகுதி மக்கள் தங்களின் நீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மலம் கலக்கப்பட்ட விவகாரம் – அதிகாரிகள் கூறுவது என்ன?

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், குடிநீர் தொட்டிக்கு அருகே மயானம் உள்ளது. அங்கு சிலர் அது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், மே 14, 2025 அன்று இரவு சிலர் குடிநீர் தொட்டியின் சுற்றுசுவரை தாண்டி குதித்து குடிநீர் தொட்டியின் மீது ஏறி அமர்ந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சென்ற காவல்துறையினர் அங்கிருந்த இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொட்டியில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்
6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்...
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?...
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!...
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!...
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?...
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!...
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!...
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா...
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...