Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிளஸ் 2 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 100/100 பெற்றது எப்படி?.. அமைச்சர் விளக்கம்!

67 12th Students Score 100 out of 100 in Chemistry | தமிழகத்தில் மே 8, 2025 அன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில், செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 167 பேர் வேதியலில் சென்டம் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 100/100 பெற்றது எப்படி?.. அமைச்சர் விளக்கம்!
கோப்பு புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 16 May 2025 18:10 PM

சென்னை, மே 16 : செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் வேதியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை (Tamil Nadu School Education Department) அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், மாணவர்கள் சென்டம் எடுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் சென்டம் எடுத்த விவகாரம்

தமிழகத்தில் மே 8, 2025 அன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் வேதியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை எழுந்தது. இதன் காரணமாக தேர்வு எழுதி 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடும் மன உலைச்சலுக்கு உள்ளாகினர். இதற்கிடையே, சம்மந்தப்பட்ட பள்ளியில் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த அமைச்சர்

இந்த விவகாரம் பெரு பேசுபொருளாக மாறிய நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இவ்வளவு சிறப்பாக பாடம் நடத்திய ஆசிரியர்கள், நன்றாக படித்த மாணவர்கள், மாணவிகளுக்கு யாரும் கிரெடிட் கொடுப்பதில்லை. எல்லோரும் சந்தேக பார்வையுடன் எங்களை பார்க்கின்றீர்கள். 2024-ல் இதே பள்ளியில் இப்படியான சிறப்பான தேர்ச்சி விகிதம் கிடைத்திருக்கிறது. அதாவது 104 பிள்ளைகள் 91 முதல் 94 மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். அதையும் நீங்கள் சந்தேகப்படுவீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 100 மதிப்பெண் பெற்ற 167 குழந்தைகளும் மற்ற பாடங்களிலும் 90, 98 என மதிப்பெண் பெற்றுள்ளார்கள். இருப்பினும் சந்தேக பார்வையுடன் கேள்விகள் எழுப்பப்பட்டதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரமாக விசாரணை நடத்தி உண்மையை சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்
6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்...
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?...
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!...
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!...
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?...
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!...
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!...
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா...
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...