ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே தேஜக கூட்டணியில் உள்ளனர்.. நயினார் நாகேந்திரன் விளக்கம்!
Nainar Nagendran Confirms EPS, OPS in NDA Alliance | தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருமே தேஜக கூட்டணியில் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரை, மே 16 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறி கூறியுள்ளார். இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் நோக்கோடு அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, கூட்டணி உறுதி செய்வது, தொகுதி பங்கீடு, கட்சியின் உட்கட்டமைப்பை சீரமைப்பது, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட்டுவது என்ன பல அதிரடி நடவடிக்கைகளை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 11 மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியை உறுதி செய்து தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்கும் கட்டாயம் தற்போது கட்சிகளுக்கு எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிகள் குறித்த முழு தகவலும் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன்
இந்த நிலையில், இன்று (மே 16, 2025) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சிக்கு வர வேண்டும். வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு கட்சி தலைவர் கூட்டணி குறித்து முடிவு செய்யலாம். அது அவரது முடிவு. தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். அதற்காக எல்லோரும் ஒரு அணியில் திரள வேண்டும். மக்கள் நலன் கருதி அனைத்துக் கட்சி தலைவர்களும் முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அமித்ஷா வேறு விஷயமாக வந்ததால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருப்பதால் அவர்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இபிஎஸ், ஓபிஎஸ் என இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.