Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Heavy Rain Forecast for 9 Districts in Tamil Nadu | தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று (மே 16, 2025) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கோப்பு புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 16 May 2025 15:59 PM

சென்னை, மே 16 : தமிழ்நாட்டின் இன்று (மே 16, 2025) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த மாவட்டங்களில் இன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் தீவிரமடைந்த கோடை வெயில் – பொதுமக்கள் அவதி

தமிழஜத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெயில் கொளுத்துவதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்ட இந்திய வானிலை ஆய்வு மையம் 2025-ல் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என தெரிவித்தது. இதேபோல, கோடையில் மழையின் அளவும் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

9 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்த நிலையில்,  இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று (மே 16, 2025) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

16.05.2025 – தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

17.05.2025 – தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குரிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றும் (மே 16, 2025), நாளை (மே 17,2025) தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அதிமுக அறிவிப்பு
மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அதிமுக அறிவிப்பு...
மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் - அரசு!
மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் - அரசு!...
8 மாதத்தில் 42 கிலோ குறைத்தேன்... டீடோட்டலரா மாறிட்டேன் - அஜித்
8 மாதத்தில் 42 கிலோ குறைத்தேன்... டீடோட்டலரா மாறிட்டேன் - அஜித்...
ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம்!
ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம்!...
மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு? - விசாரணை தீவிரம்!
மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு? - விசாரணை தீவிரம்!...
EPFO : தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை நீக்குவது எப்படி?
EPFO : தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை நீக்குவது எப்படி?...
ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100/100 - அமைச்சர் விளக்கம்!
ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100/100 - அமைச்சர் விளக்கம்!...
AK 64 படத்தின் ஷூட்டிங் எப்போது? நடிகர் அஜித்தே கொடுத்த அப்டேட்!
AK 64 படத்தின் ஷூட்டிங் எப்போது? நடிகர் அஜித்தே கொடுத்த அப்டேட்!...
மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வேண்டுமா? - இந்த விஷயத்தை கைவிடுங்க
மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வேண்டுமா? - இந்த விஷயத்தை கைவிடுங்க...
கடக ராசிக்கு செல்லும் செவ்வாய்.. இந்த 6 ராசிக்கு செம லக்!
கடக ராசிக்கு செல்லும் செவ்வாய்.. இந்த 6 ராசிக்கு செம லக்!...
யூடியூபை விளம்பரங்கள் இல்லாம பார்க்கணுமா? இதை டிரை பண்ணுங்க!
யூடியூபை விளம்பரங்கள் இல்லாம பார்க்கணுமா? இதை டிரை பண்ணுங்க!...