Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO : தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை நீக்குவது எப்படி?

New EPFO update : EPFO தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடிகளைஉங்கள் UAN கணக்கில் இருந்து ஆன்லைனில் நீக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஃப் கணக்குகள் துல்லியமாக இருக்க இந்த அம்சம் மிக முக்கியம். இதனை எப்படி மேற்கொள்வது என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

EPFO : தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை நீக்குவது எப்படி?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 16 May 2025 18:30 PM

பணியாளர் வைப்பு நிதி நிறுவனம்  (EPFO) தனது யுஏஎன் (UAN) கணக்கு வைத்திருக்கும்  உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் புதிய மற்றும் பயனுள்ள வசதியை 2025 ஜனவரியில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடிகளை (Member ID) உங்கள் யுஏஎன் கணக்கில் இருந்து நீக்கும் வசதியை ஆன்லைனில் மேற்கொள்ளலாம். யுஏஎன் என்பது EPFO வழங்கும் தனிப்பட்ட அடையாள எண் ஆகும். அதன் கீழ் உறுப்பினர்களின் அனைத்து உறுப்பினர் ஐடிகளும் இணைக்கப்படும். இது பணியாளர்கள் தங்கள் வேலை செய்யும் காலம் வரை  பிஎஃப் பணம் எவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது என்பதை ஒரே இடத்தில் கண்காணிக்க உதவுகிறது.

EPFO-வின் புதிய அறிவிப்பு

EPFO ஒரு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், உறுப்பினர்கள் தவறுதலாக  இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடிகளை நீக்குவதற்கான வசதி வழங்கப்படுகிறது. ஒரு பணியாளர் தங்களின் வாழ்நாள் முழுவதும் ஒரே யுஏஎன் மட்டுமே இருக்க வேண்டும் என்பது முக்கியக் கொள்கை. ஒருவேளை பல யுஏஎன்  இருந்தால், அவற்றை ஒன்றாக இணைக்கும் வசதியையும் EPFO வழங்குகிறது.

தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை நீக்குவது எப்படி?

  • தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடிகளை நீக்குவதற்கான ஆன்லைன் வழிமுறை பின்வருமாறு:
  • https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.
  • உங்கள் யுஏஎன்,  பாஸ்வேர்டு மற்றும் captcha உள்ளீடு செய்யவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த OTP-யை உள்ளீடு செய்யவும்.
  • ‘View’ எனும் மெனுவில் உள்ள ‘Service History’ என்பதை கிளிக் செய்து அந்த பகுதிக்கு செல்லவும்.
  • தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடிக்கு எதிரில் உள்ள ‘Delink’ பொத்தானை அழுத்தவும்.
  • உறுதி கேட்டால், ‘OK’ கிளிக் செய்து தொடரவும்.
  • ‘Reason for Delinking’ தேர்வு செய்து, தேவையான ஒப்புதல்களை வழங்கி ‘Get OTP’ கிளிக் செய்யவும்.
  • ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளீடு செய்து Submit செய்யவும்.
  • உங்கள் தகவல்களை ஒருமுறை சரிபார்த்தவுடன், தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடி நீக்கப்படும். தவறுதலாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடி நீக்கப்பட்டால் அதுகுறித்து உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
  • இச்செயல்முறை தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், EPFO சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் பிஎஃப் கணக்குகள் துல்லியமாகவும் தவறுகள் இல்லாமலும் இருப்பது, ஓய்வூதிய நிதி திரும்பப் பெறுவதிலும்,  எந்த சிக்கலும் இல்லாமல் கணக்கை பயன்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது EPFO அறிமுகப்படுத்திய இந்த புதிய அம்சம் ஊதியதாரர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் பிஎஃப் பணம் சரியாக நமது கணக்கிற்கு செல்வதை இது உறுதி செய்யும். எனவே நமது உறுப்பினர் ஐடி சரியாக இருக்கிறதா என ஒருமுறை பரிசோதனை செய்வது நல்லது.

6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்
6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்...
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?...
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!...
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!...
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?...
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!...
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!...
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா...
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...