Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: கடக ராசிக்கு செல்லும் செவ்வாய்.. இந்த 6 ராசிக்கு செம லக்!

செவ்வாய் கடக ராசியில் பெயர்ச்சியாகி 2025 ஜூன் 4 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சொத்து, நிதி லாபங்கள், வேலை, உடல்நலம், குடும்பம் என பல அம்சங்களில் முன்னேற்றம் காணலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: கடக ராசிக்கு செல்லும் செவ்வாய்.. இந்த 6 ராசிக்கு செம லக்!
ஜோதிடப்பலன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 May 2025 17:21 PM

ஜோதிடத்தைப் பொறுத்தவரை கிரகங்களின் செயல்பாடு என்பது மிக முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்தது. தனது பலவீனமான கடக ராசியின் வழியாக செவ்வாய் பகவான் 2025, ஜூன் 4 ஆம் தேதி வரை பயணிக்க உள்ளார். அத்தகைய காலம் வரை சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படப்போவதாக ஜாதகத்தில் கணிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் தற்போது நிலையாக இருப்பதால், அதன் வலிமை மிக கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்தி மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படும் செவ்வாய் மேலே சொல்லப்பட்டுள்ள ராசிகளுக்கு என்னென்ன பலன்களை தரப்போகிறார் என்பது பற்றிக் காணலாம்.

  1. மேஷம்: இந்த ராசியின் அதிபதியான செவ்வாய் நான்காவது வீட்டில் நிலையாக இருக்கிறார். இதனால் ராசிக்காரர்களுக்கு வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். அதேசமயம் சொத்து தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். மேலும் மதிப்புமிக்க பல சொத்துக்கள் கைக்கு வரும். நிலம் வாங்கும் வாய்ப்பு அமையும். தாயார் தரப்பிலிருந்து சொத்துக்கள்  கிடைக்க  வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் நேரம் வரும். வணிகங்களில் செயல்பாடு கணிசமாக அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள்.
  2. கடகம்: செவ்வாய் இந்த ராசியில் நிலையாக இருக்கிறார். இதனால் சொந்த வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். பெரும்பாலான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து உங்களுக்கு தீர்வு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவீர்கள்.  தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும். வருமான வளர்ச்சி தொடர்பான எடுக்கும் எந்தவொரு முயற்சியும் இரட்டை பலனைத் தரும். மனதில் உள்ள முக்கியமான ஆசைகள் நிறைவேறும்.
  3. கன்னி: இந்த ராசிக்கு செவ்வாய் லாப வீட்டில் இருக்கிறார். இதனால் சொத்து விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். நிச்சயமாக நில வாங்கும் வாய்ப்பு அமையும்.  சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பணியாளர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் அமையும். வருமானம் பல வழிகளில் வளரும். குழந்தைகள் பிறப்பது தொடர்பான நல்ல செய்திகள் வரும். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் நீங்கும். சகோதர சகோதரிகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி நட்பும் நெருக்கமும் அதிகரிக்கும். நோய்களிலிருந்து தீர்வு பெறுவீர்கள்.
  4. துலாம்: இந்த ராசிக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் பலம் அதிகரிப்பதால், உங்கள் வேலையில் நிச்சயமாக பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உயர்வு உண்டாகும். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். சொத்து மற்றும் நிதி லாபங்கள் அதிகரிக்கும். சமூகத்தில் உயர் வகுப்பினருடன் தொடர்புகள் உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்களில் இருந்த தடைகள்  நீங்கும். வேலையில்லாதவர்களுக்கு தொலைதூரப் பகுதியில் விரும்பிய வேலை கிடைக்கும். நல்ல செய்திகளை அடிக்கடி கேட்பீர்கள்.
  5. விருச்சிகம்: இந்த ராசியின் அதிபதியான செவ்வாய், அதிர்ஷ்ட வீட்டில் வலுப்பெற்றுள்ளார். இதனால் நீங்கள் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தந்தையிடமிருந்து ஆதரவு பெருகும். வெளிநாடு செல்ல முயற்சிகளுக்கு அதற்கான வாய்ப்பு அமையும். உடல்நலம் பெரிதும் மேம்படும். பிரபலங்களுடன் நெருங்கிய உறவுகள் உண்டாகும். தன யோகங்கள்  இரண்டு முறை ஏற்படும் என்பதால் திடீர் நிதி ஆதாயத்திற்கும் வழி உள்ளது. பங்குகள் மற்றும் முதலீடுகள் எதிர்பார்ப்புகளை விட லாபத்தைத் தரும்.
  6. மீனம்: இந்த ராசிக்கு மிகவும் சாதகமான கிரகமான செவ்வாய், இந்த ராசியின் ஐந்தாவது வீட்டில் நிலையாக உள்ளது. இது தனிப்பட்ட முறையிலும் குடும்ப ரீதியாகவும் சில முக்கியமான நல்ல முன்னேற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானம் அபரிமிதமாக வளரும். பங்குகள் மற்றும் பிற நிதி பரிவர்த்தனைகள் மிகவும் லாபகரமாக இருக்கும். நீங்கள் செலுத்த வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.  முன்னோர் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைப் பேறுக்கான அறிகுறிகள் தென்படும். வேலையில் திறமை அங்கீகரிக்கப்படும். எதிர்பாராத சொத்து லாபங்கள் உண்டாகும்.

(ஜோதிட அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்
6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்...
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?
கோழி ஈரலில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கொள்ளலாமா?...
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!...
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்!...
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்! இயற்கையாக சரிசெய்வது எப்படி?...
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!
டாஸ்மாக் இயக்குனர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!...
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!
வீடியோவுக்கு இளைஞர் செய்த செயல்.. துணிச்சலாகப் பேசிய இளம் பெண்!...
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா
மோகன்லாலை போல யாராலும் அதைச் செய்யமுடியாது.. நடிகர் எஸ்.ஜே.சூர்யா...
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!
விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? நடிகர் அஜித் மாஸ் பதில்!...
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்
PPF Scheme: மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்...
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!
யூடியூபில் Humming மற்றும் whistle செய்து பாடல்களை தேடலாம்!...