Fatty Liver : ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Sugar and Fatty Liver : இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மது பழக்கம் இல்லாதவர்களும் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்கள் இனிப்புகளை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்த கட்டுரையில் மருத்துவர்களின் அளிக்கும் விளக்கம் குறித்து பார்க்கலாம்.

முன்பெல்லாம் அதிகமாக மது அருந்துபவர்களுக்கு தான் கல்லீரல் (Liver) சம்மந்தமான நோய்கள் ஏற்படும். ஆனால் இப்போதெல்லாம் மது அருந்தாதவர்களுக்கும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) எனப்படும் கல்லீரலில் கொழுப்பு படியும் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மாறி வரும் வாழ்க்கை முறையும், தவறான உணவுப் பழக்கமும் முக்கியக் காரணிகளாகும். பொதுவாக ஃபேட்டி லிவர் பிரச்னை எளிதில் தெரிவதில்லை. ஆனால் நோய் தீவிரமாகும்போது தான் அதன் தாக்கமும் கடுமையாக இருக்கும். அதனால் குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோனை செய்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மது பழக்கம் இல்லாதவர்களையும் பாதிக்கும் ஃபேட்டி லிவர்
மது பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பிரச்னை வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைகள் போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது . உங்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்னை இருந்தால், உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஃபேட்டி லிவர் நோயாளிகள் இனிப்புகள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் இருக்கும். மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஃபேட்டி லிவர் இப்போதெல்லாம் பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நான்கு பேரில் ஒருவருக்கு இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிலருக்கு இது ஆரம்பகட்டத்தில் இருந்தாலும், சிலருக்கு இது தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்க வாழ்க்கை முறையிலும் உணவுப் பழக்கத்திலும் மாற்றங்களைச் செய்ய மருத்துவர் அறிவுறுத்துகிறார்கள். கல்லீரல் கொழுப்பாக மாறும்போது, இனிப்பை உட்கொள்வது சரியா மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்கல் இனிப்பு சாப்பிடலாமா?
ஃபேட்டி லிவர் உள்ளவர்கள் இனிப்புகளை சாப்பிடுவது நோயாளிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று டாக்டர் ஆர்.கே. குப்தா கூறுகிறார். இது நோயாளிக்கு கடுமையான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க முடியாத பட்சத்தில் குறைந்த அளவில் சர்க்கரையை உட்கொள்ளலாம். இந்த பிரச்னை உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவையும் தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக, கல்லீரலில் அதிக கொழுப்பு படிய வாய்ப்பு உள்ளது. கல்லீரல் நோயாளிகள் மருத்துவரை அணுகிய பின்னரே உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால் நோய் மேலும் பரவாது.
ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்?
கொழுப்பு கல்லீரல் நோயாளிகள் பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள் மற்றும் புரதங்களை உட்கொள்ள வேண்டும். நீங்கள் அசைவம் சாப்பிட்டால், சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இதில் கொழுப்பை குறைப்பதுடன் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.