Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vetrimaaran : ‘வாடிவாசல்’ படத்துக்கு பிறகு அடுத்த படம் அவருடன்தான்- இயக்குநர் வெற்றிமாறன்!

Director Vetrimaarans New Film Following Vaadivaasal : கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் விடுதலை பார்ட் 2 படத்தைத் தொடர்ந்து, வாடிவாசல் படமானது உருவாக்கவுள்ளது. இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வருகின்ற நிலையில், விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷுடன் படத்தில் இணையவுள்ளதாகக் கூறியுள்ளார்.

Vetrimaaran : ‘வாடிவாசல்’ படத்துக்கு பிறகு அடுத்த படம் அவருடன்தான்- இயக்குநர் வெற்றிமாறன்!
இயக்குநர் வெற்றிமாறன்Image Source: Social Media
barath-murugan
Barath Murugan | Published: 19 May 2025 21:26 PM

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் (Dhanush)  பொல்லாதவன்  (Polladhavan) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் அடுத்தடுத்த பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இவரின் இயக்கத்திலும், விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) முன்னணி நடிப்பிலும் வெளியான படம் விடுதலை 2 (Viduthalai 2) . இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது சூர்யாவின் (Suriya)  நடிப்பில் உருவாக்கவுள்ள வாடிவாசல் (VaadiVaasal) படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்புகள் கடந்த 2022ம் ஆண்டிலே வெளியாகியது. அதைத் தொடர்ந்து 2 வருடங்களுக்குப் பின் இந்த படமானது உருவாகிவருகிறது.

இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வரும் 2025, ஜூன் மாதம் முதல் மதுரையில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன், வாடிவாசல் படத்திற்குப் பின் பிரபல நடிகரான தனுஷின் நடிப்பில், புதிய படத்தை இயக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வெற்றிமாறன் கூறியதை விவரமாகப் பார்க்கலாம்.

இயக்குநர் வெற்றிமாறன் கூறிய விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் வெற்றிமாறனிடம், தொகுப்பாளர் எப்போது அடுத்து தனுஷுடன் படத்தில் இணைவீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு இயக்குநர் வெற்றிமாறன் “அடுத்த படத்தில் நான் தனுசுடன்தான் இணையவுள்ளேன், சூர்யாவின் வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தை நடிகர் தனுஷை வைத்துத்தான் இயக்கவுள்ளேன்.

மேலும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த படம் வடசென்னை 2 படமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இயக்குநர் வெற்றிமாறன் எந்த படம் என்று கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் வெற்றிமாறன் பேசிய வீடியோ :

சூர்யாவின் முன்னணி நடிப்பில் தமிழில்அடுத்து உருவாகவுள்ள படம் வாடிவாசல். இந்த படத்திற்கு முன் நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார். வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் 46வது படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான் இசையமைக்கவுள்ளார்.

சூர்யாவின் வாடிவாசல் படமானது ஜல்லிக்கட்டு கதைக்களத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளது. இதை வி க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இந்த வாடிவாசல் படமானது வரும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?...
ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. LSG-ன் பிளே ஆஃப் கனவை தகர்த்த SRH
ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. LSG-ன் பிளே ஆஃப் கனவை தகர்த்த SRH...
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?...
மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற உதவும் வெண்டைக்காய் நீர்?
மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற உதவும் வெண்டைக்காய் நீர்?...
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? பிரச்னைகள் என்ன?
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? பிரச்னைகள் என்ன?...
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?...
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு...
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!...
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்...
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்...
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு...