Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Antony : நடிகர் விஜய் ஆண்டனியின் ’26வது படம்’.. டைட்டில் என்ன தெரியுமா?

Vijay Antony 26th Movie Title Update : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் , இசையமைப்பாளர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பல பணிகளைச் செய்துவருபவர் விஜய் ஆண்டனி. இவரின் முன்னணி நடிப்பில் தொடர்ந்து ஆண்டுக்கு 2 படங்கள் வீதம், திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் 26வது படத்தின் டைட்டிலை அவரே வெளியிட்டுள்ளார்.

Vijay Antony : நடிகர் விஜய் ஆண்டனியின் ’26வது படம்’.. டைட்டில் என்ன தெரியுமா?
விஜய் ஆண்டனி Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 19 May 2025 18:09 PM

பிரபலமான நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்த இவர், அதைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு வெளியான நான் (Naan) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தற்போதுவரை பல படங்களில் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஹிட்லர் (Hitler). கடந்த 2024ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் தனா (Dhana) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷ்ன் த்ரில்லர் படமாக இந்த ஹிட்லர் இருந்தது. ஆனால் இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை, இந்த படமானது தோல்வியில் முடிந்தாலும் தொடர்ந்து , தனது கைவசத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கிட்டத்தட்ட 5 படங்களை வைத்துள்ளார்.

அந்த படங்களின் தொடர்ந்து அவரின் நடிப்பில் உருவாக்கவுள்ள 26 படத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் இந்த படத்தின் டைட்டில் தராது வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் 26வது படத்திற்கு “லாயர்” (LAWYER) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த 26வது திரைப்படத்தை இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் (Joshua sethuraman) இயக்கவுள்ளார். இந்த படமானது சட்டம் சார்ந்த க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாம். இந்த படத்தின் முதல் அறிவிப்பு கடந்த 2025, மே 17ம் தேதியில் வெளியாகியது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் விஜய் ஆண்டனி பாத்திமா விஜய் ஆண்டனி என்ற பேனரின் கீழ் தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கும் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனிதான் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து இந்த படத்தின் நடிகர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் இந்த படத்திற்கு முன் மார்கன், வள்ளி மயில், அக்னிச் சிறகுகள், காக்கி, மற்றும் சக்தி திருமகன் போன்ற சுமார் 5 படங்கள் வெளியீட்டிற்கு வரிசையில் இருக்கிறது.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!...
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்...
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்...
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு...
வாழ்க்கையில் இந்த 7 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க!
வாழ்க்கையில் இந்த 7 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க!...
சென்னையில் அமலுக்கு வரும் குடிநீர் ஏ.டி.எம்.. எப்போது? எங்கே?
சென்னையில் அமலுக்கு வரும் குடிநீர் ஏ.டி.எம்.. எப்போது? எங்கே?...
வீட்டில் எறும்பு தொல்லை இருக்கா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!
வீட்டில் எறும்பு தொல்லை இருக்கா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!...
இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த 10 பேர் கைது
இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த 10 பேர் கைது...
நிலையான வைப்பு நிதி கடன் - இத்தனை சிறப்பு அம்சங்களா?
நிலையான வைப்பு நிதி கடன் - இத்தனை சிறப்பு அம்சங்களா?...
சுவருக்குள் நடுவில் சிக்கிக்கொண்ட மூதாட்டி.. மீட்ட தீயணைப்பு துறை
சுவருக்குள் நடுவில் சிக்கிக்கொண்ட மூதாட்டி.. மீட்ட தீயணைப்பு துறை...
மாதம் ரூ.2,800 முதலீடு - வட்டியாக மட்டும் ரூ.31,824 கிடைக்கும்!
மாதம் ரூ.2,800 முதலீடு - வட்டியாக மட்டும் ரூ.31,824 கிடைக்கும்!...