Actor Soori : லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை- நடிகர் சூரி பேச்சு!
Soori Wants To Act In Lokesh Kanagarajs Film : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூரி. வெற்றிமாறனின் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகனாகவே நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக மாமன் படம் வெளியான நிலையில், அதையடுத்து பேசிய நேர்காணல் ஒன்றில் , இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படத்தில் நடக்க ஆசை என்று நடிகர் சூரி பேசியுள்ளார்.

நடிகர் சூரியின் (Soori) நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாமன் (Maaman). இந்த படத்தின் கதையை நடிகர் சூரி எழுத, விலங்கு வெப் தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj) இயக்கியுள்ளார். சூரி மற்றும் பிரசாந்த் பாண்டியராஜின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படமானது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்றே கூறலாம். குடும்ப கதைக்களம் கொண்டு பீல் குட் படமாகவே அமைந்திருந்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) நடித்திருந்தார். இந்த படமானது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் சூரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குநர் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜைப் (Lokesh Kanagaraj) புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படத்தில் நடிப்பதற்கு ஆசை என்றும் கூறியுள்ளார்.
தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மாமன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய லோகேஷும் தனது தயாரிப்பில் சூரியின் படங்கள் உருவாக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். இதை தொடர்ந்துதான் நடிகர் சூரி லோகேஷின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆசைப் படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நடிகர் சூரி பேசியதை விரிவாகப் பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜை பற்றி நடிகர் சூரி பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகர் சூரி, டாப் இயக்குநர்களில், இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் இயக்குநர்களாக லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ இருந்து வருகிறார்கள். எனக்கும் லோகேஷ் கனகராஜின் ப்ரொடக்ஷ்ன் கம்பெனியில் இருந்து 2 – 3 கதை சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் விரைவில் அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன்.
அதுபோல ஒரு நடிகனாக நானும் அவருடைய இயக்கத்தில் படத்தில் நடிக்க கேவண்டும் என்று ஆசைதான், அதுவும் எதிர்காலத்தில் நடக்குமா என்று பார்க்கலாம். LCU கதைக்குத் தேவைப்பட்டால் நான் நடிப்பேன் என்றும் நடிகர் சூரி அந்த நேர்காணலில் பேசியுள்ளார். தற்போது இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் சூரி இயக்குநர் லோகேஷின் கனகராஜின் படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.
சூரியின் மாமன் திரைப்படம் :
Children love it, families adore it! #Maaman is the film that’s stolen every heart! ❤️
Watch it in theatres now – don’t miss out!@sooriofficial‘s #MaamanInTheatresNow
🎫 Book your tickets now: https://t.co/6Nn3Qq0P06 | https://t.co/tBaJStBYHu
Directed by @p_santh pic.twitter.com/pV55JkUsIS
— Lark Studios (@larkstudios1) May 19, 2025
நடிகர் சூரியின் நடிப்பில் இறுதியாக வெளியாகி திரையரங்குகளில் அசத்திவரும் படம் மாமன். இந்த படமானது திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, பாபா பாஸ்கர், ஸ்வாசிகா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது தற்போது திரையரங்குகளில் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.