டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ்… இயக்குநரின் நெகிழ்ச்சிப் பதிவு!
Director Abishan Jeevinth: கோலிவுட் சினிமாவில் தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வரும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் சாதனைப் படைத்து வருகின்றது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Director Abishan Jeevinth) இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டு வருகிறது டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு நடிகர் தனுஷ் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை நேரிழ் அழைத்து வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இன்று மே மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று நடிகர் தனுஷ் சாரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. நடிகர் தனுஷ் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்காக அவரது அன்பான வாழ்த்துக்களை கூறியதற்கு நன்றி. நடிகர் தனுஷ் சார், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டீசரைப் பார்த்த போது இது கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் என்று எனக்குத் தெரியும் என கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
மேலும் தனுஷ் சாரின் மோட்டிவேஷனுக்கு மிக்க நன்றி. இது உண்மையிலேயே எங்களுக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும் சந்திப்பு என்று இயக்குநர் அபிஷன் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எக்ஸ் தள பதிவு:
Had the privilege of meeting @dhanushkraja sir today! Grateful to receive his warm wishes for Tourist Family.
He said, “The moment I saw the teaser, I knew it would work.”
Thank you so much for the encouragement, sir — it truly means a lot to us!— Abishan Jeevinth (@Abishanjeevinth) May 18, 2025
வெற்றி நடை போடும் டூரிஸ்ட் ஃபேமிலி:
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த 1-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தில் நடிகர்கள் சசிகுமார் நாயகனாகவும் சிம்ரன் நாயகியாகவும் நடித்து இருந்தனர். பொருளாதாரா சிக்கல் காரணமாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு நாடு கடந்து வரும் குடும்பத்தை மையமாக வைத்து ஒரு ஃபீல் குட் படமாக வெளியாகி இருந்தது டூரிஸ்ட் ஃபேமி.
இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து படக்குழுவிற்கு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது போல வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸை தெரிக்கவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.