Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026 Tamil Nadu Elections: திமுக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை அமைக்கும்.. விசிக தலைவர் திருமாவளவன் உறுதி..!

VCK Leader Thirumavalavan: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கணித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி இன்னும் வடிவம் பெறவில்லை என்றும், பாமக, தேமுதிக, விஜய் கட்சியின் நிலைமை தெளிவாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 Tamil Nadu Elections: திமுக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை அமைக்கும்.. விசிக தலைவர் திருமாவளவன் உறுதி..!
விசிக தலைவர் திருமாவளவன்Image Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 May 2025 19:02 PM

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்ற கழகத்தின் (DMK) தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இன்னும் ஒரு வருடத்தில் திமுகவின் ஆட்சி முடிவுக்கு வரும்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Elections) தீவிரமாக நடைபெறும். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை அமைக்க முயற்சிக்கும். அதேநேரத்தில், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க தேர்தலில் களம் காண்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடும் நிலையில், நடிகர் விஜய் (TVK Vijay) புதிதாக தொடங்கியவுள்ள தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பது தெரியவில்லை. இதே நிலைமைதான் தற்போது பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும். இந்தநிலையில், வருகின்ற 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி:

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, “தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த நிமிடம் வரை திமுக தலைமையிலான கூட்டணிதான், கூட்டணி என்ற வடிவத்துடன் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணி என்ற வடிவத்தையே இதுவரை ஏற்படுத்தவில்லை. அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், பாஜகவும் சேர்ந்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், அது தொடருமா என்று கேட்டால் தெரியாது. அதே கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக, இன்னும் அதை பற்றிய எந்தவொரு முடிவை எடுக்கவில்லை. இதுவரை எந்த அணியில் இருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அதேபோல், தேமுதிக என்ன செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. ஆகவே, இந்த கட்சிகள் கூட்டணியாகவே வடிவம் பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணியில் சேரப்போவதாக செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் பேசப்பட்டு வருகிறது. அதன்படி, விஜய் அதிமுக கூட்டணியில் இணைவாரா அல்லது தனது தலைமையின்கீழ் செயல்பட அதிமுகவிற்கு அழைப்பு விடுவாரா என்பது தெரியவில்லை. அதன்படி, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணிதான் மீண்டும் மக்கள் செல்வாக்குடன் ஆட்சியை அமைக்கும் என்பதை பெரிதும் நம்புகிறேன். ” என்று தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி:

தொடர்ந்து இந்தியா கூட்டணி குறித்து பேசிய திருமாவளவன், “தேசிய அளவிலான இந்தியா கூட்டணி சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியாவுக்கும், இந்தியா கூட்டணிக்கு வழிகாட்டியாகவும் செயல்படும்” என்று தெரிவித்தார்.

ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு...
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!...
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்...
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்...
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு...
வாழ்க்கையில் இந்த 7 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க!
வாழ்க்கையில் இந்த 7 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க!...
சென்னையில் அமலுக்கு வரும் குடிநீர் ஏ.டி.எம்.. எப்போது? எங்கே?
சென்னையில் அமலுக்கு வரும் குடிநீர் ஏ.டி.எம்.. எப்போது? எங்கே?...
வீட்டில் எறும்பு தொல்லை இருக்கா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!
வீட்டில் எறும்பு தொல்லை இருக்கா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!...
இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த 10 பேர் கைது
இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த 10 பேர் கைது...
நிலையான வைப்பு நிதி கடன் - இத்தனை சிறப்பு அம்சங்களா?
நிலையான வைப்பு நிதி கடன் - இத்தனை சிறப்பு அம்சங்களா?...
சுவருக்குள் நடுவில் சிக்கிக்கொண்ட மூதாட்டி.. மீட்ட தீயணைப்பு துறை
சுவருக்குள் நடுவில் சிக்கிக்கொண்ட மூதாட்டி.. மீட்ட தீயணைப்பு துறை...