Thug Life : திரிஷாவின் நடனத்தில்.. ‘தக் லைஃப்’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
Thug Life Movie Second Single Update :கோலிவுட் சினிமாவில் சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம்தான் தக் லைஃப். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்க, நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் கமல் ஹாசன் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதைத் தொடர்ந்து சுகர் பேபி என்ற இரண்டாவது பாடலின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 (Ponniyin Selvan 2) படத்தைத் தொடர்ந்து, மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிவருகிறது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் என நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ளார். கிட்டத்தட்ட இருவருமே இணையான ரோலில்தான் நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து சுமார் 1 வருடத்திற்கும் மேலாக இந்த படம் தயாராகியுள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தில் இருந்து வெளியான ‘ஜிங்குச்சா ஜிங்குச்சா’ என்ற பாடலானது இணையத்தில் ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடலின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. ‘சுகர் பேபி’ (Sugar Baby) என்ற இந்த பாடலானது வரும் 2025, மே 21ம் தேதியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வெளியான இந்த தகவலானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
No Rules, Just Love#SugarBaby Second Single from May 21#ThuglifeAudioLaunch from May 24#Thuglife#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR #IMAX
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_… pic.twitter.com/XXmYxTEHbD— Raaj Kamal Films International (@RKFI) May 19, 2025
நடிகர் கமலின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மட்டும் இரு நடிகைகள் நடித்துள்ளனர். நடிகை அபிராமியும் சார், நடிகை த்ரிஷாவும் சரி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாகத்தான் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துவருகிறார் என்று அனைவரும் நினைத்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவருக்கும் ஷாக்கை கொடுத்து. மேலும் இந்த படத்தில் நடிகர்கள் கமல் மற்றும் சிம்பு இருவரும் எதிரியாக இருப்பார்கள் என்று ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.
இந்த பாதத்தில் யார் வில்லன் மற்றும் யார் ஹீரோ என்ற விஷமானது தெளிவாகத் தெரியவில்லை, இந்த படம் வந்தால்தான் கதைக்களம் எவ்வாறு உள்ளது என்று தெரியவரும். இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நிச்சயமாக இந்த படத்திற்கு பான் இந்தியாவரை நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.