Vicky Kaushal: பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?
Vicky Kaushal’s Simple Daily Diet : பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்கி கவுசல். தற்போது 37 வயதாகும் விக்கி கவுசல் ஃபிட்னஸில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் எடுத்துக் கொள்ளும் உணவுகள் குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.

பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் விக்கி கவுசல் (Vicky Kaushal). கடைசியாக இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாவா. இந்த படம் சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சாம்பாஜியின் வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். பிரம்மாண்டமாக உருவான கடந்த பிப்ரவரி 14, 2025 அன்று வெளியாகி வெறும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து லவ் அண்ட் வார் என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்கி கவுசலும் பிரபல பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃபும் காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது 37 வயதாகும் விக்கி கவுசல் பிட்னஸில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக கடைசியாக அவர் நடித்த சாவா படத்தில் மராத்திய மன்னரான சாம்பாஜி வேடத்தில் மிரட்டலான உடற்கட்டுடன் காட்டியளித்திருந்தார். இந்த நிலையில் விக்கி கவுசல் தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம்
View this post on Instagram
நடிகர் தனது உணவில் பெரும்பாலும் முட்டை, கோழிக்கறி மற்றும் மீன் ஆகியவை அடங்கும், இது தசை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்று கூறுகிறார். அவர் ஆற்றலுக்காக தோசை மற்றும் அரிசியையும் சாப்பிடுவதாகக் கூறினார். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்திகளை மட்டுமே ரொட்டியாக சாப்பிடுவதாகவும் நட்சத்திரம் கூறுகிறார். அந்த நட்சத்திரம் பெரும்பாலும் உள்ளூர் உணவையே சாப்பிடுவதாகவும் கூறுகிறார்.
விக்கி கவுசலுக்கு பிடித்த உணவு
View this post on Instagram
காலை உணவாக முட்டை மற்றும் டோஸ்ட், மதிய உணவாக தோசை மற்றும் சிக்கன், இரவு உணவாக சாதம் மற்றும் மீன் என தனது உணவு முறையைப் பற்றி அவர் கூறுகிறார். எனக்குப் பிடித்த பழம் மாம்பழம் எனவும் தனக்குப் பிடித்த காய்கறிகள் பீன்ஸ், ப்ரோக்கோலி மற்றும் காளான்கள் என்றும் அந்த பேட்டியில் விக்கி கவுசல் தெரிவித்திருந்தார்.
பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வாசிப்பூர் படம் மூலம் ஹிந்தியில் விக்கி கவுசல் அறிமுகமானார். அவர் நடித்த மாசான் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியிலும் வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சர்தார் உத்தம் சிங் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.