Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? அதில் உள்ள பிரச்னைகள் என்ன?

Copper Bottle Water : காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் அருந்துவது நல்லது என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து அனைவரும் காப்பர் வாட்டர் பாட்டிலை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். உண்மையில் இதில் உள்ள நன்மைகள் என்ன? இதில் உள்ள பிரச்னைகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? அதில் உள்ள பிரச்னைகள் என்ன?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 19 May 2025 22:42 PM

தண்ணீர் (Water) நம் உடலுக்கு பல விதமான நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக கோடை காலத்தில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நாம் அனைவரும் வெவ்வேறு வகையான தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக பிளாஸ்டிக் (Plastic) பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வுகளை அடிக்கடி பார்த்திருப்போம். அந்த வகையில் பிளாஸ்டிக் தவிர்த்து இன்று சந்தையில் பல வகையான தண்ணீர் பாட்டில்கள் கிடைக்கின்றன. குறிப்பாக கப்பர் (Copper) எனப்படும் தாமிரத்தால் ஆன வாட்டர் பாட்டிலில் தண்ணீர் அருந்துவது உடலுக்கு நல்லது என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றது. இதனையடுத்து காப்பர் பாட்டில்களுக்கு அதிக தேவை உள்ளது. பழங்காலத்திலிருந்தே காப்பர் பாத்திரங்களில் தண்ணீர் அருந்துவது மற்றும் பிற உணவுகளை சமைப்பதற்கும் பயன்படுத்தி வந்திருக்கிறோம். காப்பர் பாட்டிலின் நன்மகள் மற்றும் அதில் உள்ள சிக்கல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வரலாற்றில் தாமிரத்தின் பயன்பாடு

பண்டைய காலங்களிலிருந்தே எகிப்து போன்ற நாடுகளில் தாமிரம் அல்லது செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது. இதன் பயன்பாடு ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. செம்புப் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நீரான பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.  இது வாத, பித்த மற்றும் கப தோஷங்களை நீக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது நச்சுக்களை அகற்றும் திறன் கொண்டதாகவும் கருதப்பட்டது.

தாமிரம் தண்ணீரை எவ்வாறு சுத்திகரிக்கிறது?

தாமிர உலோகத்தால் ஆன பாத்திரங்களில் தண்ணீர் இரவு முழுவதும் அல்லது 6 முதல் 8 மணி நேரம் சேமிக்கப்படும் போது, ​​பாத்திரத்தில் இயற்கையாகவே செம்புத் துகள்கள் உருவாகின்றன. செப்புத் துகள்கள் தண்ணீருக்குள் நுழையும் செயல்முறை ஒலிகோடைனமிக் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தண்ணீருக்குள் நுழையும் செப்பு மூலக்கூறுகள் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் நன்மைகள்

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . இதில் உடலுக்கு கெடுதல் செய்யக் கூடிய நுண்ணுயிரிகளை எதிர்க்கிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது. மேலும் செரிமானப் பிரச்னைகள், அல்சர் எனப்படும் வயிற்று புண்கள் போன்றவற்றுக்கு தீர்வாக அமையும் என கூறப்படுகிறது.  தாமிரம் நிறைந்த தண்ணீர் குடிப்பது எடை குறைக்க உதவும்.
மெலனின் உற்பத்திக்கு தாமிரம் உதவுகிறது. இது உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.

குறைபாடுகள்

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சில பிரச்னைகளும் இருக்கின்றன. முக்கியமாக உடலில் அதிகப்படியான தாமிரம் சேரும்போது அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும்  வாந்தி, வயிற்று வலி மற்றும் கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கிறது. எனவே தினசரி 9 மில்லிகிராம் அளவுக்கு தண்ணீர் அருந்துவதால் எந்த பாதிப்பும் இல்லை என சொல்லப்படுகிறது.

 

73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?...
ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. LSG-ன் பிளே ஆஃப் கனவை தகர்த்த SRH
ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. LSG-ன் பிளே ஆஃப் கனவை தகர்த்த SRH...
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?...
மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற உதவும் வெண்டைக்காய் நீர்?
மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற உதவும் வெண்டைக்காய் நீர்?...
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? பிரச்னைகள் என்ன?
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? பிரச்னைகள் என்ன?...
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?...
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு...
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!...
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்...
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்...
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு...