LSG vs SRH: ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. லக்னோவின் பிளே ஆஃப் கனவை தகர்த்த ஹைதராபாத்!
Sunrisers Hyderabad Beat Lucknow Super Giants: ஐபிஎல் 2025ன் 61வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. லக்னோ 205 ரன்கள் எடுத்தது. சிறப்பான தொடக்க ஆட்டத்தின் மூலம், அபிஷேக் சர்மா (59) மற்றும் இஷான் கிஷன் (35) ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிளாசென் (47) மற்றும் மெண்டிஸின் (32) பங்களிப்பு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 61வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 19ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் (Sunrisers Hyderabad) லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 65 ரன்களும், ஐடன் மார்க்ராம் 61 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 45 ரன்களும் எடுத்தனர். இந்த இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 206 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.
206 ரன்கள் இலக்கு:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் அதர்வா தயாதே களமிறங்கினர். இதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முதல் விக்கெட் 17 ரன்களில் விழுந்தது. அதர்வா தயாதே 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு, அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் முடிவிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 50 ரன்களை கடந்தது. அபிஷேக் சர்மா 8 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 23 ரன்கள் எடுக்க, இஷான் கிஷன் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்தார். இதன்பிறகு, அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் இடையே 82 ரன்கள் என்ற பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதற்கிடையில், இஷான் கிஷன் 35 ரன்கள் எடுத்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்தில் கிளீன் பவுல்டாகி வெளியேறினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி:
LUCK? NO! 𝐖 is with us 🔥#PlayWithFire | #LSGvSRH | #TATAIPL2025 pic.twitter.com/Xl5yVKVffz
— SunRisers Hyderabad (@SunRisers) May 19, 2025
மறுமுனையில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உதவியுடன் 59 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடி அவுட்டானார். இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, ஹைதராபாத் அணிக்கு கடைசி 60 பந்துகளில் அவருக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது.
தொடர்ந்து, உள்ளே வந்த ஹென்ரிச் கிளாசென் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 55 ரன்கள் கூட்டணி அமைத்து ஹைதராபாத் அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தனர். கிளாசென் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுக்க, மறுபுறம் மெண்டிஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். இறுதியில், நிதிஷ் குமார் ரெட்டி 2 பந்துகளில் 5 எடுத்து தனது அணியின் வெற்றியை 6 விக்கெட் வித்தியாசத்தில் உறுதி செய்தார்.