Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025 Playoffs Race: பிளே ஆஃப் பந்தயத்தில் ஒரு இடம் காலி.. போட்டியிடும் 3 அணிகள்.. எந்தெந்த அணிக்கு வாய்ப்பு..?

IPL Points Table: ஐபிஎல் 2025 இறுதிச் சுற்றுக்கான போட்டி மும்பை, டெல்லி, லக்னோ அணிகளுக்கு இடையே சூடுபிடித்துள்ளது. மும்பைக்கு இன்னும் இரண்டு, டெல்லிக்கு இரண்டு, லக்னோவுக்கு மூன்று போட்டிகள் உள்ளன. அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இவை மூன்றும் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணியின் வாய்ப்புகளையும் இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

IPL 2025 Playoffs Race: பிளே ஆஃப் பந்தயத்தில் ஒரு இடம் காலி.. போட்டியிடும் 3 அணிகள்.. எந்தெந்த அணிக்கு வாய்ப்பு..?
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 May 2025 15:00 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு, பிளே ஆஃப்களுக்கான போர் மிகவும் கடினமாகிவிட்டது. ஐபிஎல் 2025ன் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. தற்போது மீதமுள்ள ஒரு இடத்திற்கு 3 அணிகள் கடுமையாக போட்டி போட இருக்கின்றன. அதன்படி, இந்த பந்தயத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் உள்ளன. இப்போது இந்த 3 அணிகளுக்கும் உள்ள ஒரே ஒரு வழி என்னவென்றா, மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் சூப்பரான வெற்றியை பெறுவதுதான். இந்த 3 அணிகளும் ஏதேனும் ஒரு போட்டியில் சிக்கி கொண்டாலும் பிளே ஆஃப் பந்தயத்தில் சிக்கி கொள்ளும். இந்தநிலையில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான பிளே ஆஃப் கணக்கு என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

மும்பை இந்தியன்ஸ்:

ஐபிஎல் 2025ன் புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 12 போட்டிகளில் 14 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது. அதன்படி, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வலுவான போட்டியாளராக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதற்கு, மும்பை அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும், லக்னோ அணி மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் தோல்வியை சந்தித்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும்.

அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியிடம் தோல்வியை சந்திந்து பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்தால், புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணியை முந்திவிடும். இருப்பினும், டெல்லி கேபிடல்ஸ் அணி தனது கடைசி லீஜ் போட்டியில் பஞ்சாப் அணியையும் தோற்கடிக்க வேண்டும். இந்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐபிஎல் 2025ல் இருந்து வெளியேறும்.

டாப் 2 இடங்களை பிடிக்க வாய்ப்பு:

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 2 இடங்களை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் சிறந்த ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்று, அதேநேரத்தில், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தால் மட்டுமே இது நடக்கும். அதேபோல், புள்ளிகள் பட்டியலில் டாப் 1ல் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோற்றாலும், மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் வர வாய்ப்புள்ளது.

டெல்லி கேபிடல்ஸ்:

அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது மோசமான சூழ்நிலையில் உள்ளது. இந்த அணி கடைசி 8 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியை சந்திந்துள்ளது. இப்போது மீதமுள்ள 2 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே டெல்லி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க முடியும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் தோற்றால் வெளியேறும். அதேபோல், டெல்லி அணி மும்பைக்கு எதிரான வெற்றி பெர்று பஞ்சாபிற்கு எதிராக தோல்வியடைந்தாலும், 15 புள்ளிகளை மட்டுமே பெறும். அப்போது, மும்பை அணி ஒரு வெற்றியை பெற்று 16 புள்ளிகளுடன் தகுதிபெறும்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெளியேறும் அபாயத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளன. லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டும் என்றால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். அதன்படி, 16 புள்ளிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறும். அதேபோல், மும்பை மர்றும் டெல்லி அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளில் தோற்க வேண்டும்.

குருபெயர்ச்சி மாற்றம்.. இந்த 6 ராசிக்கு எதிர்பாராத யோகம்!
குருபெயர்ச்சி மாற்றம்.. இந்த 6 ராசிக்கு எதிர்பாராத யோகம்!...
சினிமாவில் '30 வருடத்தைக்' கடந்தார் இயக்குநர் சுந்தர் சி!
சினிமாவில் '30 வருடத்தைக்' கடந்தார் இயக்குநர் சுந்தர் சி!...
மாணவர்களுக்கு 55% வரை தள்ளுபடியில் சிறந்த லேப்டாப்கள்
மாணவர்களுக்கு 55% வரை தள்ளுபடியில் சிறந்த லேப்டாப்கள்...
இந்தியா சத்திரம் அல்ல - இலங்கை தமிழரின் வழக்கில் நீதிமன்றம்
இந்தியா சத்திரம் அல்ல - இலங்கை தமிழரின் வழக்கில் நீதிமன்றம்...
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ்...
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ்......
இனி வரும் நாட்களில் மழையா? வானிலை ஆய்வு மைய தலைவர் எச்சரிக்கை!
இனி வரும் நாட்களில் மழையா? வானிலை ஆய்வு மைய தலைவர் எச்சரிக்கை!...
சூர்யாவின் 46வது படப் பூஜை.. சூர்யாவுடன் இணையும் மமிதா பைஜூ!
சூர்யாவின் 46வது படப் பூஜை.. சூர்யாவுடன் இணையும் மமிதா பைஜூ!...
ரவி மோகனின் தனி ஒருவன் 2 படம் எப்போது தொடங்கும்?
ரவி மோகனின் தனி ஒருவன் 2 படம் எப்போது தொடங்கும்?...
கிழக்கு நோக்கிய திசையில் தட்சிணாமூர்த்தி.. இந்த கோயில் தெரியுமா?
கிழக்கு நோக்கிய திசையில் தட்சிணாமூர்த்தி.. இந்த கோயில் தெரியுமா?...
கோடையில் உணவு சீக்கிரம் கெட்டுப்போகிறதா..? தடுப்பது எப்படி..?
கோடையில் உணவு சீக்கிரம் கெட்டுப்போகிறதா..? தடுப்பது எப்படி..?...
பேராண்மை பட நடிகையைத் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?
பேராண்மை பட நடிகையைத் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?...