Amazon Back to School offer : மாணவர்களுக்கு 55% வரை தள்ளுபடியில் சிறந்த லேப்டாப்கள்
Ideal laptops for school : அமேசான் நிறுவனம் தற்போது பள்ளி மாணவர்களுக்கு தேவையான லேப்டாப்களை பேக் டூ ஸ்கூல் என்ற பெயரில் 55% வரை தள்ளுபடியில் விலையில் விற்பனை செய்கிறது. இதில் HP, ASUS, Lenovo, Dell மற்றும் Apple போன்ற முன்னணி பிராண்டுகள் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன.

தற்போது ஆன்லைன் வகுப்புகள், கல்வி சார்ந்த யூடியூப் (Youtube) வீடியோக்கள் போன்ற அனைத்து தேவைகளுக்கும் லேப்டாப் (Laptop) அவசியமாகிறது. மேலும் இப்பொழுது பள்ளிகளில் மாணவர்களுக்கு புராஜெக்ட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை செய்வதற்கு லேப்டாப் என்பது மிகவும் தேவைப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ‘Back to School’ சலுகையை அமேசான் (Amazon) தற்போது அறிவித்துள்ளது. கல்விக்காக தேவையான டிஜிட்டல் சாதனங்களில், குறிப்பாக லேப்டாப்களுக்கு 55 சதவகிதம் வரை சிறந்த தள்ளுபடியை அளிக்கிறது. இதை கவனத்தில் கொண்டு, மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ற பல வகையான பிராண்டட் லேப்டாப்களை சலுகை விலையில் பெறலாம். கோடைவிடுமுறை முடிந்து விரைவில் பள்ளி திறக்கப்படவுள்ள நிலையில் தற்போது இந்த பேக் டு ஸ்கூல் ஆஃபரை அமேசான் அறிவித்துள்ளது.
மாணவர்களுக்காக சலுகை விலையில் சிறந்த லேப்டாப்கள்
HP 15s, 12th Gen i3 லேப்டாப்
இந்த லேப்டாப்பில் Intel Core i3-1245U பிராசசர், 8ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 15.6 இஞ்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, 7 முதல் 9 மணி நேர பேட்டரி லைஃப் ஆகிய வசசிகள் கிடைக்கின்றன. இதன் ஒரிஜனல் விலை ரூ. 57, 000 என கூறப்படும் நிலையில் அமேசானில் ரூ. 35,990க்கு கிடைக்கிறது.
ASUS Vivobook 14 (2023)
இந்த லேப்டாப்பில் Intel Core i5 12th Gen பிராசசர், 8 ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 14 இஞ்ச் ஆன்டிகிளேர் ஸ்கிரீன் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள், பிரசென்டேஷன் ஆகியவற்றுக்கு சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ. 63,990 என கூறப்படும் நிலையில் அமேசானில் இந்த மாடலானது ரூ. 41, 990க்கு கிடைக்கிறது.
Lenovo IdeaPad Slim 3 (Intel Core i3)
இந்த லேப்டாப் 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி, நல்ல பேட்டரி வசதி உள்ளிட்ட வசதிகள் கொண்ட இந்த லேப்டாப், குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் கூடிய லேப்டாப் தேடுபவர்களுக்கு நல்ல சாய்ஸ். இதன் ஒரிஜினல் விரை ரூ. 52,999 என கூறப்படும் நிலையில் அமேசானில் ரூ32, 990க்கு கிடைக்கிறது.
Apple MacBook Air M1
இந்த லேப்டாப் மாடலானது ஆப்பிள் எம்ஐ சிப் என்ற பிராசசர், 256 ஸ்டோரேஜ் வசதி, 18 மணி நேரம் சார்ஜ் நிக்கக் கூடிய பேட்டரி வசதி ஆகியவற்றுடன் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.99,900 என கூறப்பட்டாலும் அமேசானில் இதன் விலை ரூ.74,990க்கு கிடைக்கிறது. அறிவியல், மருத்துவ மாணவர்களுக்கு ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் டிசைனிங் பணிகள் மேற்கொள்பவர்களுக்கு சரியான சாய்ஸ்.
Dell Inspiron 14 (Ryzen 5)
இந்த லேப்டாப் AMD Ryzen 5 பிராசசர், 8 ஜிபி ரேம் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 14இஞ்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே ஆகிய வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ. 61,000 என கூறப்படும் நிலையில் அமேசானில் ரூ. 39,990க்கு கிடைக்கிறது.