உங்க ஸ்மார்ட்போன் பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்
Boost Phone Battery Life : நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட ஸ்மார்ட்போனில் இருக்கும் முக்கிய பிரச்னை அதன் சார்ஜ் அடிக்கடி தீர்ந்துபோவதுதான். இந்த பிரச்னையை சரி செய்ய நமது ஸ்மார்ட்போனில் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கட்டுரையில் 5 முறைகளை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் பேட்டரியின் ஆயுளை நீடிக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் (Smartphone) நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. ஸ்மார்ட்போன் இன்றி அமையாது உலகு என சொல்லும் அளவுக்கு ஸ்மார்ட்போன் இல்லாமல் எந்த வேலையையும் நம்மால் செய்ய முடியாது. ஆனால் ஸ்மார்ட்போனில் கிட்டத்தட்ட அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்னை என்னவென்றால், பேட்டரி (Battery) விரைவாக தீர்ந்து போவதுதான். இதனால் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இந்த பிரச்னையை சரி செய்ய இந்த 5 எளிதான மற்றும் பயனுள்ள குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க.
பிரைட்னஸை கம்மி பண்ணுங்க
ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் அதிக பேட்டரியைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக உங்கள் ஸ்மார்ட்போனை பிரைட்னஸ் அதிகம் வைத்திருந்தால் அதிக சார்ஜை எடுத்துக்கொள்ளும். எப்பொழுதும் பிரைட்னஸை குறைவாக வைத்திருக்கவும். அல்லது ஆட்டோமேட்டிக் பிரைட்னஸை ஆன் செய்யவும்.
ப்ளூடூத் மற்றும் லொகேஷனை தேவையானபோது மட்டும் பயன்படுத்துங்க
ஜிபிஎஸ், லொகேஷன் மற்றும் புளூடூத் போன்ற அம்சங்கள் அதிக பவரை பயனப்டுத்துகின்றன. பயன்படுத்தாதபோது அவற்றை நீக்கவும். இது பேட்டரி பயன்பாட்டைக் குறைத்து, ஸ்மார்ட்போனின் செயல்திறனை அதிகப்படுத்தும்.
தேவையற்ற நோட்டிஃபிகேஷனை தவிருங்கள்
நமது ஸ்மார்ட்போனில் பல செயலிகள் நாள் முழுவதும் நோட்டிஃபிகேஷனை அனுப்பிக்கொண்டே இருக்கும், இதனால் பேட்டரி வேகமாக தீர்ந்துவிடும். செட்டிங்கிற்கு சென்று தேவையில்லாத பயன்பாடுகளுக்கான நோட்டிஃபிகேஷனை ஆஃப் செய்யுங்கள்.
பேட்டரி சேவிங் மோடை பயன்படுத்தவும்
இப்போதெல்லாம் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் பேட்டரி சேவர் என்ற ஆப்சன் உள்ளது. உங்கள் பேட்டரி குறைவாக இருக்கும்போது, இந்த பயன்முறையை இயக்கவும். பின்னணி பயன்பாடுகள் மற்றும் தேவையற்ற அம்சங்களை மூடுவதன் மூலம் இது பேட்டரியைச் சேமிக்கிறது.
ஆப்களை அப்டேட் செய்யுங்கள்
பழைய ஆப்கள் பேட்டரி பவரை அதிகம் பயன்படுத்துகின்றன. எனவே, உங்கள் ஸ்மார்ட்போன் செயலிகளை அவ்வப்போது புதுப்பித்து, நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை நீக்கவும். இது தவிர, சார்ஜ் செய்யும் போது உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக உங்கள் தொலைபேசி விரைவாக சேதமடைகிறது, மேலும் பேட்டரி சிக்கலும் ஏற்படுகிறது.
இந்தக் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃபை நீடிக்கச் செய்ய முடியும். மேலும் அடிக்கடி நம் போனை சார்ஜ் செய்வதைத் தவிர்க்க முடியும். தேவையற்ற ஆப்களை நீக்குவதும் நமது போனின் பேட்டரிக்கு நல்லது. இந்தப் பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம், உங்கள் பேட்டரி ஹெல்த் மற்றும் ஸ்மார்ட்போனின் செயல்திறன் அதிகரிக்கவும் வாய்ப்பு அதிகம். இதனால் இந்த பயனுள்ள 5 டிப்ஸ்களை முயற்சி பண்ணுங்க.