Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vishal : பேராண்மை பட நடிகையைத் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்? இணையத்தில் வைரலாகும் தகவல்!

Vishal And Sai Dhanshika : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக இவரின் திருமணத்தைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து தற்போது வெளியான தகவலின்படி பேராண்மை பட நடிகை சாய் தன்ஷிகாவை அவர் திருமணம் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Vishal : பேராண்மை பட நடிகையைத் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்? இணையத்தில் வைரலாகும் தகவல்!
விஷால் மற்றும் சாய் தன்ஷிகாImage Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 19 May 2025 15:48 PM

தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் மற்றும் பிரபல நடிகர் விஷாலின் (Vishal) நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. மேலும் தற்போது அவரே துப்பறிவாளன் 2 (Thupparivaalan 2)  படத்தை இயக்கி, அதில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் சமீப காலமாக நடிகர் விஷாலின் திருமணம் குறித்தான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் விஷாலும் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும், 4 மாதங்களில் திருமணம் (Marriage) நடைபெறவுள்ளதாகவும், பொண்ணு பார்த்தாச்சு என்றும் கூறியிருந்தார். நடிகர் சங்க கட்டிடம் திறத்தற்குப் பின் எனது திருமணம் இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் நானும் எனது காதலியும் சுமார் 1 மாத காலமாகக் காதலித்து வருகிறோம். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டாம்பர் மாதத்தில் எங்களது திருமணம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அந்த ஒரு மாத காதலி யார் என்று பலரும் கேட்டுவந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது இணையத்தில் புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி நடிகர் விஷாலும், பேராண்மை படத்தின் மூலம் பிரபலமான நடிகை சாய் தன்ஷிகாவும் (Sai Dhanshika) திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இது குறித்தன அறிவிப்பை விஷால் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

நடிகை சாய் தன்ஷிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Sai Dhanshika (@saidhanshika)

யார் இந்த சாய் தன்ஷிகா ?

நடிகை சாய் தன்ஷிகா தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல நடிகையாவார். இவர் தமிழில் மனதோடு மழைக்காலம் என்ற படத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தை தொடர்ந்து மறந்தேன் மெய்மறந்தேன் மற்றும் திருடி போன்ற படங்களில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகனின் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான பேராண்மை படத்தில் முக்கியமான ரோலில் நடித்துப் பிரபலமானார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான செய்தியின் படி நடிகர் விஷாலை இவர் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த இரு தரப்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் திருமண சர்ச்சை :

கடந்த சில மாதங்களுக்கு முன், நடிகர் விஷாலும், நாடோடிகள் புகழ் நடிகை அபிநயாவும் திருமணம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து நடிகை அபிநயாவும் அதற்கு விளக்கம் கொடுத்து, தான் தனது பள்ளிப் பருவ காதலனைத் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 2025, ஏப்ரல் தொடக்கத்தில் கார்த்திக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஷாலின் திருமணம் பற்றிய தகவல்கள் அடிக்கடி வைரலாகி வந்தது. இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஒரு மாதமாகக் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தது அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவருக்குள் நடுவில் சிக்கிக்கொண்ட மூதாட்டி.. மீட்ட தீயணைப்பு துறை
சுவருக்குள் நடுவில் சிக்கிக்கொண்ட மூதாட்டி.. மீட்ட தீயணைப்பு துறை...
மாதம் ரூ.2,800 முதலீடு - வட்டியாக மட்டும் ரூ.31,824 கிடைக்கும்!
மாதம் ரூ.2,800 முதலீடு - வட்டியாக மட்டும் ரூ.31,824 கிடைக்கும்!...
உஷார்.. உயிருக்கே ஆபத்தாகும் உயர் ரத்த அழுத்தம்!
உஷார்.. உயிருக்கே ஆபத்தாகும் உயர் ரத்த அழுத்தம்!...
'தக் லைஃப்' செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
'தக் லைஃப்' செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?...
திமுக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை அமைக்கும் - திருமாவளவன்
திமுக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை அமைக்கும் - திருமாவளவன்...
குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் ஆதார் அப்டேட் அவசியம்
குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் ஆதார் அப்டேட் அவசியம்...
விஜய் ஆண்டனியின் '26வது படம்'.. டைட்டில் என்ன தெரியுமா?
விஜய் ஆண்டனியின் '26வது படம்'.. டைட்டில் என்ன தெரியுமா?...
ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாடாதா? பிசிசிஐ செயலாளர் விளக்கம்
ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாடாதா? பிசிசிஐ செயலாளர் விளக்கம்...
குருபெயர்ச்சி மாற்றம்.. இந்த 6 ராசிக்கு எதிர்பாராத யோகம்!
குருபெயர்ச்சி மாற்றம்.. இந்த 6 ராசிக்கு எதிர்பாராத யோகம்!...
சினிமாவில் 30 வருடத்தை நிறைவு செய்த இயக்குநர் சுந்தர்.சி!
சினிமாவில் 30 வருடத்தை நிறைவு செய்த இயக்குநர் சுந்தர்.சி!...
மாணவர்களுக்கு 55% வரை தள்ளுபடியில் சிறந்த லேப்டாப்கள்
மாணவர்களுக்கு 55% வரை தள்ளுபடியில் சிறந்த லேப்டாப்கள்...