KL Rahul’s Century: ஐபிஎல்லில் 5வது சதம்.. டி20யில் 8,000 ரன்கள்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்!
Gujarat Titans vs Delhi Capitals: கே.எல்.ராகுல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமான 112 ரன்கள் (சதம்) எடுத்து அசத்தினார். இது அவரது 7வது டி20 சதமும், ஐபிஎல்லில் 5வது சதமுமாகும். மேலும், இந்தப் போட்டியில் அவர் டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை நிறைவு செய்து, விராட் கோலியை முந்தினார். இதன் மூலம் டி20யில் அதிக சதங்கள் அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் (KL Rahul) சிறப்பாக பேட்டிங் செய்து 60 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம். டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்தார். இது ஐபிஎல்லில் கே.எல்.ராகுல் 5வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 112 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், டெல்லி அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. மேலும், டி20 கிரிக்கெட்டில் வேகமாக 8000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை கே.எல். ராகுல் பெற்றுள்ளார். இதன்மூலம், விராட் கோலியின் (Virat Kohli) சாதனையை முறியடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சதம்:
Opener #KLRahul is 🔥🔥🔥🔥
CENTURY 💥💥💥💥💥#IPL2025 pic.twitter.com/unxG8Rhu7s
— Thyview (@Thyview) May 18, 2025
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் அற்புதமாக செயல்பட்டு சதம் அடித்தார். இதன்மூலம், கே.எல்.ராகுல் தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 7வது சதத்தை அடித்தார். இதன்மூலம், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை பின் தள்ளினார். இவர்கள் அனைவரும் டி20 கிரிக்கெட்டில் தலா 6 சதங்களை பதிவு செய்துள்ளனர்.
19வது ஓவரில் 4வது பந்தில் பவுண்டரி அடித்து கே.எல்.ராகுல் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 5வது சதமாகும். இந்த சதத்தின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமை கே.எல்.ராகுல் படைத்தார். டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடும்போது சதம் அடித்திருந்தார்.
டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்கள்:
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது கே.எல்.ராகுல் டி20 கிரிக்கெட்டில் தனது 8000 ரன்களை நிறைவு செய்தார். இந்த போட்டி தொடங்கும்போது கே.எல்.ராகுல் 8000 ரன்களை எட்ட 33 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 33 ரன்கள் எடுத்தவுடன் 8000 ரன்களை கடந்தது மட்டுமின்றி, விராட் கோலியை முந்தினார். கே.எல்.ராகுல் 8 ஆயிரம் ரன்களை எட்ட 224 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்து கொண்டார். அதேநேரத்தில், விராட் கோலி தனது 243வது இன்னிங்ஸ்களில்தான் 8 ஆயிரம் டி20 ரன்களை நிறைவு செய்தார். இதன்படி, கே.எல்.ராகுல் அவரை விட 19 இன்னிங்ஸ்களில் குறைவாக எடுத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, கே.எல். ராகுல் இப்போது டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்கள் எடுத்த உலகின் மூன்றாவது வேகமான வீரர் ஆவார். அவருக்கு முன்னால் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மட்டுமே உள்ளனர். அதே நேரத்தில், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் அவர் 36வது இடத்தில் உள்ளார்.