Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Royal Challengers Bengaluru: ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. ஆர்சிபி பிளே ஆஃப்க்கு செல்லுமா இன்று..?

IPL 2025 Playoff Race: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 பிளேஆஃப் தகுதி மே 18 அன்று தீர்மானிக்கப்படும். 17 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தாலும், மற்ற அணிகளின் போட்டி முடிவுகளைப் பொறுத்து ஆர்சிபி-யின் நிலை மாறலாம். ராஜஸ்தான்-பஞ்சாப் மற்றும் குஜராத்-டெல்லி ஆகிய போட்டிகளின் முடிவுகள் ஆர்சிபி-யின் பிளேஆஃப் பயணத்தை நிர்ணயிக்கும். மழையால் ஏற்பட்ட புள்ளி பகிர்வு ஆர்சிபி-க்கு சாதகமாக அமையலாம் அல்லது பாதகமாக அமையலாம்.

Royal Challengers Bengaluru: ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. ஆர்சிபி பிளே ஆஃப்க்கு செல்லுமா இன்று..?
ஜிதேஷ் சர்மா - விராட் கோலிImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 18 May 2025 14:50 PM

பொதுவாகவே மே 18ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிக்கு அதிர்ஷ்டமான தேதியாகும். இந்த தேதியில்தான் பெங்களூரு அணி கடந்த 2024ம் ஆண்டு ஐபிஎல்லில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இப்போது, ஐபிஎல் 2025லிலும் (IPL 2025) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இதேபோல் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி, இன்றைய நாளில் புள்ளிகள் பட்டியலில் சிறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், 2025 மே 18ம் தேதியிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக 2வது சீசனில் பிளேஆப்க்குள் நுழையும். அதன்படி, என்ன மாற்றம்..? பெங்களூருக்கு அதிர்ஷ்டமா இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

மே 18 ஆர்சிபிக்கு அதிர்ஷ்டம்:

ஐபிஎல் 2025 சீசனில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் 17 புள்ளிகளை பெற்றாலும், இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவில்லை. இது ஏன் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில்கள் உண்மையிலே 2025 ஐபிஎல்லில் 2025 மே 18ம் தேதியில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளில் முடிவை பொறுத்து தெரியும். இரண்டு போட்டிகளின் முடிவும் 2025 மே 18ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளேஆஃப்களுக்குள் நுழைய முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.

மழையால் வந்த சிக்கல்:

இந்தியா – பாகிஸ்தான் சண்டை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025ன் சீசனானது நேற்று அதாவது 2025 மே 17ம் தேதி முதல் தொடங்கியது. இந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறவிருந்தது. இருப்பினும், மழை உள்ளே வந்ததால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஒரு புள்ளியை சேர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.

2025 மே 18ம் தேதியான இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடாது என்றாலும், இன்றைய நாளில் பிளே ஆஃப்களை எட்ட முடியும். அதற்கு இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தினால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மீண்டும் 2025 மே 18 அன்று பிளேஆஃப்களுக்கு நேரடியாகச் செல்லும். அதேநேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தினாலும் மற்றொரு போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தினால் பிளே ஆஃப் செல்லும். இதனுடன், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழையும்.

இது நடக்கவில்லை என்றால் என்ன ஆகும்..?

அதன்படி, இன்றைய நாளில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணியையும், டெல்லி கேபிடல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வீழ்த்தியது என்றால், 2025 மே 18ம் தேதியான இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டுமல்ல, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளும் பிளே ஆஃப்க்குள் செல்லாது.

தினமும் ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் சேமிக்கலாம் - எப்படி?
தினமும் ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் சேமிக்கலாம் - எப்படி?...
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி உறுதி! வெளியான தகவல்
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி உறுதி! வெளியான தகவல்...
இந்திய அணிக்காக இதை விராட் கோலி தியாகம் செய்தார் - ஆரோன் பின்ச்
இந்திய அணிக்காக இதை விராட் கோலி தியாகம் செய்தார் - ஆரோன் பின்ச்...
புதிய ரூ.20 நோட்டை அறிமுகம் செய்த ஆர்பிஐ!
புதிய ரூ.20 நோட்டை அறிமுகம் செய்த ஆர்பிஐ!...
இபிஎஃப்ஓவில் வந்த மூன்று முக்கிய மாற்றங்கள் - முழு விவரம்!
இபிஎஃப்ஓவில் வந்த மூன்று முக்கிய மாற்றங்கள் - முழு விவரம்!...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த ஐஸ்வர்யா லட்சுமி!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த ஐஸ்வர்யா லட்சுமி!...
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் அட்டாக் செய்யப்போகும் மழை..!
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் அட்டாக் செய்யப்போகும் மழை..!...
ரீல்ஸ் மூலம் ரசிகர்களைக் கவரும் நடிகை ஸ்ரீலீலா!
ரீல்ஸ் மூலம் ரசிகர்களைக் கவரும் நடிகை ஸ்ரீலீலா!...
ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. RCB பிளே ஆஃப்க்கு செல்லுமா?
ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. RCB பிளே ஆஃப்க்கு செல்லுமா?...
எதை தொட்டாலும் தடையாக இருக்கா? புதன்கிழமை இப்படி வழிபாடு பண்ணுங்க
எதை தொட்டாலும் தடையாக இருக்கா? புதன்கிழமை இப்படி வழிபாடு பண்ணுங்க...
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்...