Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rohit Sharma: மும்பை ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மா பெயர்.. குடும்பமே கண்கலங்கிய தருணம்..!

Mumbai Wankhede Stadium: வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பெயரிடப்பட்ட ஸ்டாண்ட் 2025 மே 16 அன்று திறக்கப்பட்டது. ரோஹித் சர்மா தனது பெற்றோர், மனைவி ரித்திகா ஆகியோருடன் மேடை ஏறி, ஸ்டாண்ட் திறப்பு விழாவில் பங்கேற்றார். ஸ்டாண்ட் திறக்கப்பட்டபோது ரோஹித் சர்மாவின் பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டனர். இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோஹித் சர்மா தனது குடும்பத்தினருக்கு நன்றியும், தனது கிரிக்கெட் பயணத்தின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

Rohit Sharma: மும்பை ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மா பெயர்.. குடும்பமே கண்கலங்கிய தருணம்..!
ரோஹித் சர்மா ஸ்டாண்ட்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 May 2025 23:46 PM

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் (Rohit Sharma) பெயரிடப்பட்ட ஒரு ஸ்டாண்ட் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் (Mumbai Wankhede Stadium) 2025 மே 16ம் தேதி (நேற்று) திறக்கப்பட்டது. இந்த ஸ்டாண்ட் திறக்கப்படுவதற்கு முன்பு ரோஹித் சர்மா மேடைக்கு வந்தபோது அவர் தனது பெற்றோரையும், மனைவி ரித்திகாவையும் அழைத்து வந்தார். அப்போது ஸ்டாண்ட் திறப்பதற்கான கவுண்டவுன் தொடங்கியதும் ரோஹித் சர்மாவின் தாய் பூர்ணிமா மற்றும் தந்தை குருநாத், மகாராஷ்டிரா முதலமைச்சருடன் இணைந்து ஒரு பட்டனை அழுத்தினர். அப்போது வாணவேடிக்கையுடன் ரோஹித் சர்மா பெயர் கொண்ட ஸ்டாண்ட் திறந்தது. இதை பார்த்தவுடன் ரோஹித் சர்மாவின் பெற்றோர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதனர். இந்த நேரத்தில், ரோஹித் சர்மாவின் மனைவியும் ரித்திகாவும் தனது மாமனார் பின்னால் ஒளிந்து கொண்டு அழுத காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வான்கடேயில் ரோஹித் சர்மாவின் பெயரிடப்பட்ட ஸ்டாண்ட்:

வான்கடே மைதானத்தின் ஒரு ஸ்டாண்ட் ரோஹித் சர்மாவின் பெயரிடப்பட்டது ( ரோஹித் சர்மா ஸ்டாண்ட் வான்கடே ). இது லெவல்-3 ஸ்டாண்ட், முன்பு திவேச்சா பெவிலியன் என்று அழைக்கப்பட்டது. ரோஹித் சர்மாவின் தந்தை குருநாத் சர்மா மற்றும் தாய் பூர்ணிமா சர்மா ஆகியோர் இந்த ஸ்டாண்ட் நிலையத்தைத் திறந்து வைத்தனர். அந்த நேரத்தில், ரோஹித் மற்றும் அவரது முழு குடும்பத்திற்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. ஸ்டாண்ட் திறப்பு விழாவின் போது ரோஹித் உரை நிகழ்த்தும்போது, ​​சில சமயங்களில் அவரால் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர்.

ரோஹித் சர்மா பெருமிதம்:

ஸ்டாண்ட் திறந்தபிறகு பேசிய ரோஹித் சர்மா, “இன்று என் குடும்பம், என் பெற்றோர், சகோதரர் மற்றும் மனைவில் இங்கே இருப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். நான் விளையாடும்போது எனக்காக விட்டுகொடுத்த அனைத்திற்கும் நான் எப்போதும் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். இன்று என்ன நடக்கிறது என்பதை நான் கனவில் கூட நினைத்ததில்லை. என் சிறுவயதில் மும்பை மற்றும் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன். ஜாம்பவான்களுக்கு முன் என் பெயரை பார்ப்பதற்கு, அதை வார்த்தைகளால் விளக்க முடியாது. நான் இன்னும் கிரிக்கெட் விளையாடி வருவதால் இதுவும் சிறப்பு. நான் இரண்டு வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன், ஆனால் நான் இன்னும் ஒரு வகையான கிரிக்கெட்டை விளையாடி வருகிறேன்.

நான் வருகின்ற 2025 மே 21 ஆம் தேதி (ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக) விளையாடும்போது, ​​இங்கே என் பெயரில் ஒரு ஸ்டாண்ட் இருக்கும் போது, ​​அது மிகவும் வித்தியாசமான உணர்வாக இருக்கும். நான் என் நாட்டிற்காக இங்கு விளையாடும்போது, ​​அந்த தருணமும் மிகவும் சிறப்பானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.