IPL 2025: கௌரவத்திற்காக களமிறங்கும் ராஜஸ்தான்.. பிளே ஆஃப் பயத்தில் பஞ்சாப்.. யாருக்கு வெற்றி?
Rajasthan Royals vs Punjab Kings: ஐபிஎல் 2025 சீசனின் 59வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மே 17 அன்று ஜெய்ப்பூரில் மோதுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆஃப் தகுதிக்காக வெற்றி தேவை. ராஜஸ்தான் ஏற்கனவே வெளியேறிவிட்டது. பிட்ச் தட்டையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட்-டு-ஹெட் சாதனையில் ராஜஸ்தான் முன்னிலையில் உள்ளது.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனின் 59வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 17ம் தேதி ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தாஸ் ராயல்ஸ் (Rajasthan Royals) அணி ஏற்கனவே பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறிவிட்டது. அதேநேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) பிளே ஆஃப்களுக்குள் நுழைய இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் 6 புள்ளிகளை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட், பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல் வரலாற்றில் ராயஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தின் பிட்ச் தட்டையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பிட்ச் சற்று கடினமாகவும், லேசான புற்களும் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பந்து எளிதாக பேட்டில் வந்து சேரும். இதனால், பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் பனி பெய்ய வாய்ப்பு உள்ளது, இது பந்து வீச்சாளர்களுக்கு சிக்கல்களை அதிகரிக்கும்.
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இதுவரை 61 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 22 போட்டிகளிலும், 2வது பேட்டிங் செய்த அணி 39 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
வானிலை எப்படி..?
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, போட்டியின் போது வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால், முதலில் பேட்டிங் செய்யும் வீரர்கள் ரன் எடுக்க சற்று திணறலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (கேப்டன்), குணால் சிங் ரத்தோர், துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, மகேஷ் சிங் டெக்வேக்னா ஆர்ச்சர், மஹேஷ்த் தெக்வாஷ்வால்.
பஞ்சாப் கிங்ஸ்:
பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மதுல்லா ஓமர்சாய், யுஸ்வேந்திர சிங் சாஹல், அர்ஷ்தீப் சிங்.