Vijay Sethupathi : ‘ஏஸ்’ திரைப்பட விழாவில் பிரபல இயக்குநரை புகழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi Praised Director Arumuga Kumar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் விரைவில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் ஏஸ். இந்த படத்தின் ப்ரோமோஷன் சமீபத்தில் தொடங்கிய நிலையில், நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் ஆறுமுக குமாரைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் திரைப்படம் விடுதலை 2 (Viduthalai 2). இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி புரட்சி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்காவிட்டாலும், ஓரளவு திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 4க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாகிவந்தது. அதை ஒரு படம்தான் ஏஸ் (Ace). இந்த படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga Kumar) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஆக்ஷ்ன் நாயகனாக இதில் , நடித்து அசத்தியுள்ளார். இதில் அவருடன் நடிகர்கள் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) , யோகி பாபு (Yogi Babu) மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இந்த படமானது உருவாகியுள்ளது. இந்த ஏஸ் படமானது வரும் 2025, மே 23ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது.
இந்நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று 2025, மே 17ம் தேதியில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, இயக்குநர் ஆறுமுக குமாரை பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். மேடையில் பேசிய அவர், “நான் நடிகனாக நடிக்கும் போது என்னை ஆடிஷனில் இவன் நன்றாக நடிப்பான் என்று கூறியதே, ஆறுமுக குமார்தான்” என்று அவர் மேடையில் உருக்கமாகப் பேசியுள்ளார்.
இயக்குநர் ஆறுமுக குமாரைப் பற்றி நடிகர் விஜய் சேதுபதி சொன்ன விஷயம் :
ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மேடையில் பேசிய விஜய் சேதுபதி, எனக்கு இயக்குநர் ஆறுமுக குமாரைக் கடந்த 2012ம் ஆண்டு வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்திற்கு முன்பே தெரியும். முன் ஒரு படத்தில் நடிப்பதற்காக நான் ஆடிஷனில் கலந்துகொண்டேன், அதில் இவன் நன்றாக நடிப்பால் என்று என்னை பரிந்துரை செய்ததே ஆறுமுக குமார்தான்.
மேலும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்து கொடுத்தவரும் ஆறுதான். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்வதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன், மேலும் அந்த இருளில் விளக்கை ஏற்றிவைத்தது இயக்குநர் ஆறுமுக குமார்தான். பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பது எப்போது எனது உயிரை ஈர்த்து வைத்திருப்பதற்கு உதவுகிறது என்று நடிகர் விஜய் சேதுபதி ப்ரீ ரிஸில் நிகழ்ச்சியில் உருக்கமாகப் பேசியுள்ளார்.
ஏஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Masss-ah , Kalakalaa, Swag-ah erangurom❤️🔥#ACE is all set to release on 23rd May!
Soodhu Kavvum 😈Watch The Trailer ▶️ https://t.co/sBxfq2mLbp#ACETrailer #ACEFromMay23@VijaySethuOffl @rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal… pic.twitter.com/FOngcMhDaG
— Think Music (@thinkmusicindia) May 16, 2025
நடிகர் விஜய் சேதுபதியின் இந்த ஏஸ் படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இணையான ரோலில் நடிகர் யோகி பாபுவும் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவாறு பல பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 2025, மே 23ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.