Sreeleela : ரீல்ஸ் மூலம் ரசிகர்களைக் கவரும் ஸ்ரீலீலா.. பான் இந்திய நாயகியாக வரிசைகட்டி நிற்கும் படங்கள்!
Sreeleela New Movies List : தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் நாயகியாகக் கலக்கிவருபவர் ஸ்ரீலீலா. இவரின் நடிப்பில் தமிழில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் பராசக்தி. நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும், இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் படங்களைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

தற்போது பான் இந்திய திரைப்படங்களில் நடித்து சென்சேஷனல் நாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் ஸ்ரீலீலா (Sreeleela) . இவர் கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்ராங்கதா (Chitrangada) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் நுழைந்தார். இதைத் தொடர்ந்து கிஸ் (Kiss) என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் அர்ஜுனின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் கதாநாயாகியாக அறிமுகமானார். இதை அடுத்ததாகத் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். தெலுங்கு படத்தில் தனது நடிப்பின் மூலம் எவ்வளவு பிரபலமானாரோ அதைப் போல நடிகை ஸ்ரீலீலா தனது நடனத்தின் மூலமாகவும் மிகவும் பிரபலமானார். இவரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான குண்டூர் காரம் (Guntur Kaaram) என்ற படத்தில், நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படத்தில் அவருடன் மடக்கி தட்டு என்ற பாடலில் நடனமாடி அசத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீலீலா, நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்திலும் இடம்பெற்றிருந்தனர். அந்த படத்தில் வெளியான கிஸ்ஸிக் என்ற சிறப்புப் பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த பான் இந்தியா முழுவதும் பேமஸானார்.
இந்த பிரபலத்தைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீலீலாவிற்கு ஒட்டுமொத்த இந்திய அளவிற்கும் ரசிகர்கள் அதிகரித்தனர். இதைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீலீலாவின் புகைப்படங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற விஷயங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருவது உண்டு. அந்த விதத்தில் நடிகர் தனுஷின் மரியான் படத்தில் இடம் பெற்ற பாடலிற்கு அவர் வெளியிட்டிருந்த ரீல்ஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரீ லீலா, தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து பான் இந்திய சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
நடிகை ஸ்ரீலீலாவின் கைவசம் இருக்கும் புதிய படங்கள் :
நடிகை ஸ்ரீலீலாவின் நடிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 4 படங்கள் வீதம் இருக்கிறது. தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் மாஸ் ஐதரா படமும், நடிகர் அகில் அக்கினேனி நடிப்பில் லெனின் என்ற படத்திலும், இந்தியில் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் ஆஷிகி 3 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி படத்திலும் லீட் நாயகியாக நடித்து வருகிறாரா என்பது குறிப்பிடத்தக்கது.