Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Swasika : ‘சூர்யா45’ படத்தில் நடிக்க இதுவே காரணம் .. லப்பர் பந்து நாயகி ஸ்வாசிகா பேச்சு!

Swasika Talks about Suriya 45 : தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தாலும், கடந்த 2024ம் ஆண்டு வெளியான லப்பர் பந்து படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஸ்வாசிகா. இவர் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூர்யாவின் 45வது படத்தில் நடிப்பதற்குக் காரணம் பற்றி அவர் பேசியுள்ளார்.

Swasika : ‘சூர்யா45’ படத்தில் நடிக்க இதுவே காரணம் .. லப்பர் பந்து நாயகி ஸ்வாசிகா பேச்சு!
ஸ்வாசிகாImage Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 18 May 2025 12:05 PM

கோலிவுட் சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஸ்வாசிகா (Swasika). இவர் கடந்த 2009ம் ஆண்டு தமிழில் வெளியான வைகை (Vaikai) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார். அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம்  (Goripalayam) என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் சாட்டை (Saattai) படத்தில் சமுத்திரகனியின் மனைவி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது எல்லாம் இவருக்கு பெரும் வரவேற்புகள் கிடைக்கவில்லை. படத்தில் சாதாரண கதாபாத்திரம் போலத்தான் இருந்தார். மேலும் தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பின் இவருக்கு மிகுந்த பிரபலத்தைக் கொடுத்த படம் லப்பர் பந்து (Lubbar Pandhu) . கடந்த 2024ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த படத்தைத் தொடர்ந்துதான் இவருக்குத் தமிழில் மிகுந்த பிரபலம் கிடைத்து. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து , மேலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.. இவரின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ மற்றும் மாமன் போன்ற படங்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து சூர்யாவின் 45வது படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்வாசிகா, சூர்யாவுடன் படத்தில் நடிப்பதற்குக் காரணம் பற்றிக் கூறியுள்ளார். அதில் அவர் ஒரே கிராமத்துக் கதைக்களம் கொண்ட படத்தில் மட்டும் நடிக்கவேண்டும் , வித்தியாசமான கதைக்களம் கொண்ட படத்திலும் நடக்கவேண்டும் என்றுதான் சூர்யாவின் 45வது  (Suriya45) படத்திலும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகை ஸ்வாசிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Swaswika (@swasikavj)

நடிகை ஸ்வாசிகா பேசிய விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஸ்வாசிகா, சூர்யாவுடன் படத்தில் நடிப்பதைப் பற்றிப் பேசியிருக்கிறார். அதில் அவர் “திரைப்படங்களில் எப்போதும் கிராமத்துக் கதைக்களத்தில் மட்டுமே நடித்தால் நன்றாக இருக்காது. கிராமம் மற்றும் வித்தியாசமான படங்களில் வேறுவேறு ரோலில் நடித்தால்தான், அடுத்த படங்களிலும் வாய்ப்புகள் கிளைக்கும். இல்லை எனில் இவர் கிராமத்து கதைக்களம் கொண்ட ரோலில் மட்டும்தான் நடிப்பார் என்றும் கூறிவிடுவார்கள். அதன் காரணமாகத்தான் சூர்யாவின் படங்களில் வித்தியாசமான ரோலில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டேன்.

இதன் காரணமாக எனது நடிப்பிற்கு ப்ரோமோஷன் தேவைப்படாது. ஏனென்றால் சூர்யாவின் படம்தான் பிரபலமாகிவிடுமே. மேலும் சூர்யாவின் 45 படத்தில் ஒரு ஒரு கதாபாத்திரமும் மற்ற கதாபாத்திரங்களுடன் இணைந்துதான் இருக்கிறது. நிச்சயமாக வசூல் ரீதியாக வெற்றிபெறும் படமாக சூர்யா45 படம் அமையும் என்று நடிகை ஸ்வாசிகா பேசியுள்ளார்.

வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி உறுதி! வெளியான தகவல்
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி உறுதி! வெளியான தகவல்...
இந்திய அணிக்காக இதை விராட் கோலி தியாகம் செய்தார் - ஆரோன் பின்ச்
இந்திய அணிக்காக இதை விராட் கோலி தியாகம் செய்தார் - ஆரோன் பின்ச்...
புதிய ரூ.20 நோட்டை அறிமுகம் செய்த ஆர்பிஐ!
புதிய ரூ.20 நோட்டை அறிமுகம் செய்த ஆர்பிஐ!...
இபிஎஃப்ஓவில் வந்த மூன்று முக்கிய மாற்றங்கள் - முழு விவரம்!
இபிஎஃப்ஓவில் வந்த மூன்று முக்கிய மாற்றங்கள் - முழு விவரம்!...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த ஐஸ்வர்யா லட்சுமி!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த ஐஸ்வர்யா லட்சுமி!...
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் அட்டாக் செய்யப்போகும் மழை..!
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் அட்டாக் செய்யப்போகும் மழை..!...
ரீல்ஸ் மூலம் ரசிகர்களைக் கவரும் நடிகை ஸ்ரீலீலா!
ரீல்ஸ் மூலம் ரசிகர்களைக் கவரும் நடிகை ஸ்ரீலீலா!...
ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. RCB பிளே ஆஃப்க்கு செல்லுமா?
ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. RCB பிளே ஆஃப்க்கு செல்லுமா?...
எதை தொட்டாலும் தடையாக இருக்கா? புதன்கிழமை இப்படி வழிபாடு பண்ணுங்க
எதை தொட்டாலும் தடையாக இருக்கா? புதன்கிழமை இப்படி வழிபாடு பண்ணுங்க...
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்...
பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி!
பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி!...