Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO : இபிஎஃப்ஓவில் வந்த மூன்று முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

EPFO Announces 3 Major Updates for Users | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல வகையான சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அவற்றின் மூலம் ஏராளமான பயனர்கள் பயனடைந்து வரும் நிலையில், 3 முக்கிய அம்சங்களை அறிவித்துள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : இபிஎஃப்ஓவில் வந்த மூன்று முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 15 Jun 2025 08:04 AM

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நலனுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) பல சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அரசு துறை உழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ள நிலையில், தனியார் துறை ஊழியர்கள் பயன்பெறும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கி அதில் அவர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து வரவு வைக்கிறது.

இவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இபிஎஃப்ஓ இவ்வளவு சிறந்த பலன்களை வழங்கும் நிலையில் தற்போது 3 முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓவில் வந்த 3 முக்கிய மாற்றங்கள் – என்ன என்ன?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனது விதிகளில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

சுயவிவரம் புதுப்பிப்பு எளிதாக்கல்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சம் சுயவிவர புதுப்பித்தலை மேலும் எளிதாக்கியுள்ளது. அதாவது, UAN எண் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்தால் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், பெற்றோரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை எந்தவித ஆவணங்களும் இன்றி மிக சுலபமாக புதுப்பித்துக்கொள்ளலாம்.

இபிஎஃப் டிரான்ஸ்ஃபர்

முன்பு ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு வேலை மாறும்போது பிஎஃப் கணக்கை மாற்றுவது மிக நீண்ட செயல்முறையாக இருந்தது. தற்போது இந்த நடைமுறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15, 2025 முதல் இந்த செயல்முறை மிகவும் எளிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

UAN கூட்டு அறிவிப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் கூட்டு அறிவிப்பு செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களது UAN எண், ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்தால் அல்லது, ஆதார் ஏற்கனவே சரிப்பார்க்கப்பட்டு இருந்தால் நீங்கள் கூட்டு அறிவிப்பை மிக சுலபமாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இந்த புதிய விதி ஜனவரி 16, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட இந்த 3 முக்கிய மாற்றங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.