Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sansad Ratna Award 2025: 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு எம்பிக்கு சன்சத் ரத்னா விருது.. திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு கௌரவம்!

DMK MP CN Annadurai: திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை அவர்களுக்கு, நாடாளுமன்றத்தில் அவரது சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2025ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்பட உள்ளது. பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் வழங்கப்படும் இந்த விருது, 17 எம்பிக்களுக்கும், இரண்டு நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கும் வழங்கப்படுகிறது. இது தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் பெருமைக்குரிய விருதாகும்.

Sansad Ratna Award 2025: 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு எம்பிக்கு சன்சத் ரத்னா விருது.. திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு கௌரவம்!
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரை - சன்சத் ரத்னா விருதுImage Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 18 May 2025 19:54 PM

டெல்லி, மே 18: நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரைக்கு (CN Annadurai) சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது. அதன்படி 2025ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருதுக்கு (Sansad Ratna Awards 2025) சி.என்.அண்ணாதுரை உட்பட 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 2 நாடாளுமன்ற நிலைக்குழுக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பிரைம் பாயிண்ட் அறக்கட்டணையால் நிறுவப்பட்ட இந்த விருதுகள், நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக வழங்கப்படுகின்றன. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் (Hansraj Gangaram Ahir) தலைமையிலான நடுவர் குழுவால் விருது பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சன்சத் ரத்னா விருதுகள்:

சன்சத் ரத்னா விருதுகள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஆலோசனையை தொடர்ந்து, பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மற்றும் இ பத்திரிகை பிரீசென்ஸ் ஆகியவற்றால் 2010ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விவாதங்களில் பங்கேற்பது, கேள்விகளை எழுப்புவது மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளில் ஈடுபாடு உள்ளிட்ட நாடாளுமன்ற பணிகளில் சிறந்த பங்களிப்புகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.

யார் யார் விருதுகள்..?

நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்றதற்காக கூடுதலாக 13 எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த எம்பிக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஸ்மிதா வாக் (பாஜக)
  2. அரவிந்த் சாவந்த் (சிவசேனா – உத்தவ் பிரிவு)
  3. நரேஷ் கன்பத் மஸ்கே (சிவசேனா)
  4. வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்)
  5. மேதா குல்கர்னி (பாஜக)
  6. பிரவீன் படேல் (பாஜக)
  7. ரவி கிஷன் (பாஜக)
  8. நிஷிகாந்த் துபே (பாஜக)
  9. விதுத் பரன் மஹ்தோ (பாஜக)
  10. பிபி சவுத்ரி (பாஜக)
  11. மதன் ரத்தோர் (பாஜக)
  12. சி.என்.அண்ணாதுரை (திமுக)
  13. திலீப் சைகியா (பாஜக)

16வது மற்றும் 17வது மக்களவையில் நிலையான மற்றும் விதிவிலக்கான செயல்திறனுக்காக 4 எம்பிக்கள் சிறப்பு கௌரவங்களை பெறுகிறார்கள்.

  1. பர்த்ருஹரி மஹ்தாப் (பாஜக)
  2. சுப்ரியா சுலே (NCP-SPA)
  3. என்.கே. பிரேமச்சந்திரன் (RSP)
  4. ஸ்ரீரங் அப்பா பார்னே (சிவசேனா)

அதேபோல், பர்த்ருஹரி மஹ்தாப்பை தலைவராக கொண்ட நிதிக்கான நிலைக்குழு மற்றும் சரண்ஜித் சிங் சன்னியை தலைவராக கொண்ட வேளாண்மைக்கான நிலைக்குழுக்கு 2 நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பாராட்டப்படுகிறது.

சி.என்.அண்ணாதுரை:

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்படுகிறது. வருகின்ற 2025 ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் 15ம் ஆண்டு விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. வெற்றிமாறன் பதில்!
வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. வெற்றிமாறன் பதில்!...
ஐபிஎல்லில் 5வது சதம்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்
ஐபிஎல்லில் 5வது சதம்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்...
ஜூன் 14-க்குள் ஆதார் கார்டில் இத பண்னிடுங்க - இல்லனா சிக்கல்!
ஜூன் 14-க்குள் ஆதார் கார்டில் இத பண்னிடுங்க - இல்லனா சிக்கல்!...
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்...
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!...
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?...
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!...
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?...
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!...
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!...
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை...