Kohli-Dhoni Fan War: தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்.. திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்.. என்ன நடந்தது..?
Harbhajan Singh's Dhoni Remark: முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், தோனியின் ரசிகர்கள் மட்டுமே உண்மையான ரசிகர்கள் என்று கூறியதால், கோலி-தோனி ரசிகர்கள் இடையே சமூக ஊடகங்களில் பெரும் சண்டை மூண்டது. #ShameOnDeshdrohiDhoni மற்றும் #NationalShameKohli என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின. இந்த சர்ச்சை ஐபிஎல் 2025 போட்டிகளின் பின்னணியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று அதாவது 2025 மே 18ம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், மழை காரணமாக போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியின்போது கருத்து தெரிவிக்கும்போது ஹர்பஜன் சிங் ஏதார்த்தமாக எம்.எஸ்.தோனியின் (MS Dhoni) ரசிகர்கள் மட்டுமே உண்மையான ரசிகர்கள் என்று தெரிவித்தார். ஹர்பஜன் சிங் தெரிவித்த இந்த கருத்து விராட் கோலியின் ரசிகர்களை கோபப்படுத்தியது மட்டுமின்றி, தோனியை கடுமையாக ட்ரோல் செய்ய தொடங்கினர்.
ட்ரோலில் ரோலாகும் தோனி, கோலி பெயர்:
I am following back every one who likes and Rt this tweet
THARKI PEDO CHOKLI
BOLAND KA MOOT CHOKLI
BHARAT CHHORO CHOKLI#NationalShameKohli
pic.twitter.com/2nooGrI1DB— Muftdaal Nehra (@muftdaal_nehra) May 18, 2025
விராட் கோலியின் ரசிகர்களை தொடர்ந்து, தோனியின் ரசிகர்களும் விராட் கோலியின் ரசிகர்களை ட்ரோல் செய்ய தொடங்கினர். இதை சமூக ஊடகங்களில் போர் என்றே சொல்லலாம். சமூக ஊடகமான எக்ஸ் பக்கத்தில் விராட் கோலி ரசிகர்கள் “துரோகி தோனி” என்றும், தோனியின் ரசிகர்கள் “ தேசிய அவமானம் கோலி” என்றும் பல்வேறு பதிவுகளை இட்டு வருகின்றனர்.
தோனிக்கு எதிராக வைரலாகும் வீடியோ:
SHAME ON DESHDROHI DHONI
For money For Country pic.twitter.com/hxNYKmgSGM
— Aarav (@god_vk18) May 18, 2025
ஹர்பஜன் சிங் சொன்னது என்ன..?
Harbhajan Singh: “Only Dhoni has Real fans others have Social Media bots 😭”
OWNED Chokli 😤
pic.twitter.com/4PfJO0Fvs7— Honest Kohli Fan™💚❤️ (@KingEra_18) May 17, 2025
தோனி குறித்து பேசிய ஹர்பஜன் சிங், “ஐபிஎல்லில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி வலிமை இருக்கும் வரை விளையாட வேண்டும். எம்.எஸ்.தோனியின் ரசிகர்களே உண்மையான ரசிகர்கள். மற்ற வீரர்கள் பணம் கொடுத்து சமூக ஊடகங்களில் ப்ரோமோஷன் செய்கின்றன.” என்று தெரிவித்தார். இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் கருத்து, விராட் கோலியின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. தொடர்ந்து விராட் கோலி ரசிகர்கள், #ShameOnDeshdrohiDhoni என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றன. இதை பார்த்த தோனியின் ரசிகர்கள் பழிவாங்கும் விதமாக, #NationalShameKohli என்று விமர்சிக்க தொடங்கினர்.
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே, ஆர்சிபி அணி எப்படி..?
ஐபிஎல் 2025ல் வெளியேற்றப்பட்ட முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. அதேநேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் பந்தயத்தில் உள்ளது. பெங்களூடு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஐபிஎல் 2025ன் புள்ளிகள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி இன்னும் 2 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில், இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் கூட பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறும்.