Vetrimaaran : எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல.. வாடிவாசல் பட ரசிகர்கள் எதிர்பார்ப்பு குறித்து வெற்றிமாறன் கொடுத்த பதில்!
Vetrimaarans Response To Fans Expectations. : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்திலும் நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பிலும் தயாராகவுள்ள படம் வாடிவாசல். இந்த படத்திற்கான ரசிகர்கள் எதிர்பார்ப்புகளைப் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். அதில் அவர் எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல என்று கூறிய விஷயம் சூர்யாவின் ரசிகர்கள் மத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

கோலிவுட் சினிமாவில் சில படங்களை இயக்கியிருந்தாலும், மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் விடுதலை 2 (Viduthalai 2). இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபாதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றது . இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் வாடிவாசல் (Vaadivaasal) . இந்த படத்தில் நடிகர் சூர்யா (Suriya) முன்னணி நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தொடர்பான அறிவிப்புகள் கடந்த 2022ம் ஆண்டிலே வெளியாகியிருந்தது. இந்த படமானது முற்றிலும் ஜல்லிக்கட்டு (Jallikattu) மற்றும் கிராம கதைகளைக் கொண்டு உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகி சுமார் 2 வருடங்களுக்கும் மேலான நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் மதுரையில் தொடங்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் வாடிவாசல் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல என்று கூறியுள்ளார். இந்த விஷயமானது தற்போது சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இயக்குநர் வெற்றிமாறன் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.
வாடிவாசல் படம் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேசிய விஷயம் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்த இயக்குநர் வெற்றிமாறன், அதில் அவரிடம் வாடிவாசல் படம் பற்றி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள் அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று தொகுப்பாளர் கெட்டியிருந்தார். அதற்கு இயக்குநர் வெற்றிமாறன் , “நான் அந்த படங்களை அப்படி இயக்கியிருக்கிறேன், இந்த இப்படி படங்களை இயக்கியிருக்கிறேன் என்று அல்ல, நான் எனக்குப்பிடித்தவாறு படங்களை நான் இயக்கியிருக்கிறேன்.
மேலும் படங்களின் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் அது அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தால் நானா மகிழ்ச்சி அடைவேன். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பேற்கமுடியாது, நான் எனது 100 சதவீத உழைப்பைப் படத்திற்குக் கொடுக்கிறேன் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருந்தார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசிய வீடியோ :
#VetriMaaran about #VaadiVaasal Expectation
– I’m not responsible for the expectations. If that film matches audiences expectations I’m happy.
– But I can’t take responsibility. I can give my 100% commitment while making my films.#Suriyapic.twitter.com/MfXSKOsgKR
— Movie Tamil (@MovieTamil4) May 18, 2025
நடிகர் சூர்யாவின் இந்த வாடிவாசல் படத்தை வி க்ரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிலாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவைத் தவிர வேறு இந்த நடிகர்கள் உள்ளார்கள் என்பதைப் பற்றி அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தீவிரமாக இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு தொடங்கி , வரும் 2026ம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.