Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Trekking Safety Tips : மழை காலத்தில் டிரெக்கிங் போக விருப்பமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

Monsoon Adventure Alert : காடு மற்றும் மலைகள் வழியாக பயணம் செய்ய விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக மலைப்பகுதிகளில் டிரெக்கிங் செல்வது அனைவருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக மழைகாலங்களில் டிரெக்கிங் செல்ல அனைவரும் விரும்புவர். அப்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Trekking Safety Tips : மழை காலத்தில் டிரெக்கிங் போக விருப்பமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 18 May 2025 22:47 PM

காடு (Forest) மற்றும் மலைகள் வழியாக பயணம் செய்ய விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக மலைப்பகுதிகளில் டிரெக்கிங் (Trekking) போக அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் டிரெக்கிங் செய்யும் போது முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். குறிப்பாக டிரெக்கிங் போவதற்கு முன் மருத்துரை சந்தித்து உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் நாம் செல்லும் இடம் குறித்து முன்பே அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் நாம் டிரெக்கிங் செல்லும்போது பிரச்னை ஏற்பட்டால் எளிதாக சமாளிக்கலாம்.

வெயில்காலங்களை விட மழை மற்றும்  குளிர் காலங்களில் அதிகம் பேர் டிரெக்கிங் போக விரும்புவார்கள். குறிப்பாக மழை காலத்தில் டிரெக்கிங் செல்லும்போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மழைக்காலத்தில் டிரெக்கிங் செல்வதற்கு முன் செய்ய வேண்டியவை

  • டிரெக்கிங் செல்வதற்கு மன் வானிலை தகவல்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப திட்டமிட வேண்டும். டிரெக்கிங் தொடங்குவதற்கு முன் வானிலை குறித்த தகவல்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள நாட்களில் டிரெக்கிங் செல்வதைத் தவிர்க்கவும்.
  • எளிதில் தண்ணீரில் பாதிக்காத ஆடைகள் மற்றும் காலணிகளைப் பயன்படுத்துங்கள். மழைக்காலத்தில் டிரெக்கிங் செல்லும்போது, ​​நீரினால் பாதிக்கப்படாத வகையில் ஜாக்கெட்டுகள், பேக் கவர்கள் மற்றும் கிரிப்பிங் கொடுக்க கூடிய ஷூ ஆகியவற்றை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
  • பாறைகளில் கவனமாக நடக்க வேண்டும். மழைக்குப் பிறகு மலைப்பாதைகளில் பாறைகள் மிகவும் வழுக்கும் தன்மையுடையதாக இருக்கலாம். எனவே கவனமாக நடக்க வேண்டும். பாதுகாப்புக்கு கையில் ஒரு கம்புடன் செல்வது நல்லது.
  • மழைக்காலத்தில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் தயாராக வேண்டும். உங்கள் உடலின் ஆற்றலைப் பராமரிக்க எனர்ஜி டிரிங்க், உணவு மற்றும் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள்.
  • கனமான பேக்குகளைத் தவிர்த்து, லேசான எடை கொண்ட பேக்குகளை தேர்ந்தெடுங்கள். தேவையான பொருட்களை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்.
  •  முதலுதவி பெட்டி, டார்ச், பவர் பேங்க், மற்றும் ஜிபிஎஸ் டிராக்கர் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் கையில் இருக்க வேண்டும்.
  • குளிர்ந்த காலநிலையில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.  ஆனால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பதால் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • மழைக்காலத்தில் டிரெக்கிங் செல்லும் முன் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் இடங்களை தவிர்க்கவும்.
  •  அறிமுகமில்லாத பகுதிகளில், உங்களுடன் ஒரு உள்ளூர் வழிகாட்டி இருப்பது பாதுகாப்பானது.
  • அதிக உயரமான பகுதிகளில் சோர்வு மற்றும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்லுங்கள்.

டெல்லியை கதறவிட்ட குஜராத்.. முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி!
டெல்லியை கதறவிட்ட குஜராத்.. முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி!...
வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய அம்சம் - என்ன தெரியுமா?
வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய அம்சம் - என்ன தெரியுமா?...
திருமண வரவேற்பில் மணமகனின் கையில் துப்பிய மணமகள் - வைரல் வீடியோ!
திருமண வரவேற்பில் மணமகனின் கையில் துப்பிய மணமகள் - வைரல் வீடியோ!...
மழை காலத்தில் டிரெக்கிங் போக விருப்பமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க
மழை காலத்தில் டிரெக்கிங் போக விருப்பமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க...
வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. வெற்றிமாறன் பதில்!
வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. வெற்றிமாறன் பதில்!...
ஐபிஎல்லில் 5வது சதம்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்
ஐபிஎல்லில் 5வது சதம்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்...
ஜூன் 14-க்குள் ஆதார் கார்டில் இத பண்னிடுங்க - இல்லனா சிக்கல்!
ஜூன் 14-க்குள் ஆதார் கார்டில் இத பண்னிடுங்க - இல்லனா சிக்கல்!...
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்...
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!...
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?...
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!...