Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jailer 2 : ‘ஜெயிலர் 2’ ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!

Jailer 2 Shooting : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கூலி படத்தை தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து படக்குழு வெளியிட்ட புகைப்படம் வைரல்.

Jailer 2 : ‘ஜெயிலர் 2’ ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!
நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 ஷூட்டிங் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 18 May 2025 18:51 PM

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth)  முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியாகிய படம் வேட்டையன் (Vettaiyan). இந்த படத்தை சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜின்  (Lokesh Kanagaraj) இயக்கத்தில் கூலி  (Coolie) படத்தில் இணைத்தார் ரஜினிகாந்த். இந்த படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஷூடிங்க்கை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 (Jailer 2)  படத்தில் இணைந்தார். இந்த ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar)  இயக்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம்தான் ஜெயிலர் 1.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தான் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டிலே தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாகத் திகழ்ந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் ஜெயிலர் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் படக்குழு புதிய பதிவை வெளியிட்டுள்ளது.

அதில் இன்று ஜெயிலர் 2 படத்தின் சினிமோட்டோகிராபர் விஜய் கார்த்திக்கிற்குப் படக்குழு பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் என அவரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

இந்த பதிவில், சினிமோட்டோகிராபர் விஜய் கார்த்திக்கின் பிறந்தநாளை , நடிகர் ரஜினிகாந்த், மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இணைந்து படக்குழுவுடன் கொண்டாடியுள்ளனர். நடிகர் ரஜினியும் இந்த புகைப்படத்தில் ஜெயிலர் 2 பட கெட்டப்பில் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், சிவராஜ் குமார், எஸ்.ஜே. சூர்யா, மற்றும் பான் இந்திய பிரபலங்கள் பலரும் நடித்து வருகிறார்கள். மேலும் தெலுங்கு படப் பிரபல நடிகை நந்தமுரி பாலகிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜெயிலர் 2 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் ஜெயிலர் 1 படமும் வெளியான நிதியில், அதைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படமும் உருவாக்கி வருகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. வெற்றிமாறன் பதில்!
வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. வெற்றிமாறன் பதில்!...
ஐபிஎல்லில் 5வது சதம்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்
ஐபிஎல்லில் 5வது சதம்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்...
ஜூன் 14-க்குள் ஆதார் கார்டில் இத பண்னிடுங்க - இல்லனா சிக்கல்!
ஜூன் 14-க்குள் ஆதார் கார்டில் இத பண்னிடுங்க - இல்லனா சிக்கல்!...
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்...
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!...
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?...
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!...
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?...
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!...
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!...
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை...