Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivakarthikeyan : வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் கூட்டணி.. உறுதி செய்த இயக்குநர்!

Sivakarthikeyan & Venkat Prabhu Team Up : தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் அடுத்த இடத்தை பிடிப்பவராகக் கருதப்படுபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் மதராஸி மற்றும் பராசக்தி என இரு படங்கள் உருவாகி வருகிறது. இந்த படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், அதை வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார். .

Sivakarthikeyan : வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் கூட்டணி.. உறுதி செய்த இயக்குநர்!
சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபுImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 18 May 2025 17:29 PM

கோலிவுட் சினிமாவில் அமரன்  (Amaran) வெற்றியைத் தொடர்ந்து பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் இந்த படத்தின் மூலமாகத்தான் அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இறுதியில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைக் கொடுத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி (Madharasi) மற்றும் பராசக்தி (Parasakthi) என இரண்டு படங்களில் நடித்து வந்தார். அதில் இயக்குநர் ஏஆர். முருகதாஸ் (A.R. Murugadoss)  இயக்கத்தில் உருவாகிவரும் படம் மதராஸி. இந்த படத்தின் கதையை நடிகர் சிவகார்த்திகேயனுக்குக் கூறும் முன்பே இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ், நடிகர் விஜய்க்குக் கூறியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கமிட்டானார் என்று கூறப்படுகிறது.

இவரின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் இந்த படமானது மாறுபட்ட கதைக்களத்துடன் தயாராகிவருகிறது, இதில் சிவகார்த்திகேயன் அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களைத் தொடர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபுவின்  (Venkat Prabhu) இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் அந்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார். இந்த தகவலானது தினத்தந்தி செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது

இயக்குநர் வெங்கட் பிரபு கூறிய விஷயம் :

சமீபத்தில் விருத்தி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், சிவகார்த்திகேயனுடன் படத்தில் இணைவது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும், அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய்யின் கோட் படத்தில் முக்கியமான காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்த கூட்டணியில் உருவாகும் புதிய படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதராஸி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ. ஆர் முருகதாஸின் கூட்டணியில் உருவாகிவரும் படம் மதராஸி. இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், இந்த படத்தின் இறுதி க்ளைமேக்ஸ் காட்சிகள் ஸ்ரீலங்காவில் படமாக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த நடித்து வருகிறார். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து உருவாகிவரும் பராசக்தி படம் வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?...
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!...
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?...
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!
திமுக எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா விருது..!...
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!
திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை - வைரல் வீடியோ!...
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை
பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்... தனுஷ் உடைத்த உண்மை...
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!...
பழத்தோலை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க இப்படி பயன்படுத்தலாம்..!
பழத்தோலை சாப்பிட்டதும் தூக்கி எறியாதீங்க இப்படி பயன்படுத்தலாம்..!...
ஏசி ரூமில் இருந்து திடீரென வெயிலுக்கு போனால் ஆபத்து!
ஏசி ரூமில் இருந்து திடீரென வெயிலுக்கு போனால் ஆபத்து!...
இரவெல்லாம் ஏசி ஓடினாலும் EB பில் கம்மியா வரணுமா? - இத பண்ணுங்க!
இரவெல்லாம் ஏசி ஓடினாலும் EB பில் கம்மியா வரணுமா? - இத பண்ணுங்க!...
ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்?
ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்?...