Post Office Scheme : தினமும் ரூ.50 முதலீடு செய்தால் போதும்.. ரூ.35 லட்சம் சேமிக்கலாம்.. எப்படி?
You can earn 35 lakhs by investing 50 rupees daily | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அத்தகை சேமிப்பு திட்டம் ஒன்றில் தினமும் ரூ.50 சேமிப்பதன் மூலம் ரூ.35 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நிலையான பொருளாதாரத்தை பெற வேண்டும் என்றால் அனைவரும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் அறிவுரை வழங்குகின்றனர். காரணம் எப்போது வேண்டுமானாலும், எதிர்பாராத பொருளாதார தேவைகள் அல்லது நிதி சிக்கல்கள் ஏற்படலாம். இவற்றை எல்லாம் சமாளித்து அவற்றில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிப்பதற்கு அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். அந்த வகையில், தினமும் வெறும் ரூ. 50 முதலீடு செய்வதன் மூலம் ரூ.35 லட்சம் வரை பணம் தரும் அரசின் சிறப்பு திட்டம் ஒன்றை குறைத்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்கள்
அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது நிலையான வைப்பு நிதி திட்டம், தொடர் வைப்பு நிதி திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா, மாத வருமான திட்டம், கிராம சுரஷா யோஜனா உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், கிராம சுரஷா யோஜனா திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வருமானம் ஈட்டுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தினமும் ரூ.50 முதலீடு செய்வதன் மூலம் ரூ.35 லட்சம் பெறலாம் – எப்படி?
19 வயது முதல் 55 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் எவரும் இந்த கிராம சுரஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்வதன் முலம் ரூ.35 லட்சத்தை பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
முதலீடு செய்வது எப்படி?
இந்த கிராம் சுரஷா யோஜனா திட்டத்தில் 55 வயது வரை ரூ.1,515 பீரிமியத்தை செலுத்தி வரவேண்டும். மாதத்திற்கு மொத்தமாக ரூ.1,515 செலுத்த முடியவில்லை என்றால் தினமும் ரூ.50 என்ற விகிதம் முதலீடு செய்து வரலாம். இவ்வாறு முதலீடு செய்து வரும் பட்சத்தில் 55வது வயதில் ரூ.31,60,000 ஆக இருக்கும். இதுவே 58வது ஆண்டில் ரூ.33,40,000 ஆகவும் மற்றும் 60வது ஆண்டில் ரூ.34.60,000 பெற முடியும்.
இவ்வாறு முதலீடு செய்யும் நிலையில், முதலீடு செய்த நபர் 80 வயதை அடையும்போது அவருக்கு முதிர்வு தொகை வழங்கப்படும். ஒருவேளை முதலீடு செய்த நபர் உயிரிழந்துவிட்டால் அவரது நாமினிக்கு பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.