SIP : மாதம் 2,000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம்! எப்படி தெரியுமா?
SIP Investment Guide : சிஸ்மேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் சிப் திட்டத்தில் மாதம் ரூ.2000 முதலீட்டில் ரூ. 1 கோடி என்ற இலக்கை அடையலாம். அதற்கு பொறுமையும் மிக சரியான திட்டமிடலும் மிகவும் அவசியம். ரூ.1 கோடி என்ற இலக்கை அடைவது எப்படி என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பெரும்பாலானோருக்கு கோடீஸ்வரராக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் தங்கள் இலக்கை இலகுவாக எப்படி அடையலாம் என்பது பலருக்கும் சவாலானதாக இருக்கும் . ஆனால் உண்மையில் மாதம் சிறிய அளவில் முதலீடு (Investment) செய்வதன் மூலம் இலகுவாக தங்கள் இலக்குகளை அடையலாம். அதற்கு பொறுமையும் சரியான திட்டமிடலும் மிகவும் அவசியம். இதற்கு சிறந்த வழியாக பார்க்கப்படுவது மியூச்சுவல் பண்ட் SIP (Systematic Investment Plan). சிப்பில் முதலீடு செய்வதன் மூலம் நம் இலக்கை ஏப்படி அடையாளம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Google Pay, PhonePe மூலமாக கூட எளிதில் முதலீடு செய்யலாம்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சிப் முதலீடு செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. ஜிபே, ஃபோன்பே போன்ற பணப்பரிவர்ததனை செயலிகளைப் பயன்படுத்தி, மாதம் குறைந்தபட்சமாக 500 ரூபாயிலிருந்து முதல் முதலீடு செய்யலாம். இந்த பதிவில் மாதம் ரூ. 2,000 முதலீடு செய்து ரூ.1 கோடி வரை சேமிப்பது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
சிப்பில் மாதம் ரூ.2000 முதலீடு
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் சிப்பில் மாதம் ரூ. 2000 முதலீடு செய்ய வேண்டும். ரூ.2000 என்பது தற்போது எளிதாக சேமிக்க கூடிய தொகை தான். இந்த திட்டத்தில் 30 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக ஒருவர் தனது 30 வயதில் மாதம் ரூ. 2000 முதலீடு செய்ய தொடங்குகிறார் என்றால் அவர் 30 ஆண்டுகளில் ரூ. 7.2 லட்சம் முதலீடு செய்திருப்பார். அவருக்கு 12 சதவிகிதம் கிடைக்கும் எனில் ரூ. 54.42 லட்சம் சேர்த்து மொத்தமாக ரூ.61.62 லட்சம் கிடைக்கும்.
இந்த நிலையில் மாதம் செய்யும் முதலீட்டுத் தொகையை ரூ. 2000ல் இருந்து ரூ.2, 833 ஆக அதிகரிக்கலாம் அதன் படி 30 ஆண்டுகளில் நம் முதலீடு ரூ. 10.2 லட்சமாகஅதிகரித்திருக்கும். மேலும் ஆண்டுக்கு 12 சதவிகித வட்டி கிடைக்கும் எனில் ரூ.89.8 லட்சம் வருமானத்துடன் மொத்தமாக ரூ. 1 கோடி கிடைக்கும்.
மற்றொரு வழியில் மாதம் 2000 ரூபாயை 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 35 ஆண்டுகளில் மொத்த வருமான ரூ. 8.4 லட்சம் இருக்கும் . வட்டி விகிதத்தையும் சேர்த்து நமக்கு மொத்தமாக ரூ.1.1 கோடி கிடைக்கும்.
அதிக சீரான வருமானம் பெற செய்ய வேண்டிய விஷயங்கள்
-
ஆண்டுக்கு நம் முதலீட்டுத் தொகையை 10 சதவிகிதம் உயர்த்துவது சிறந்தது.
-
வரி மற்றும் பங்குச் சந்தை மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
விலை உயர்வை தவிர்க்க முடியாது, ஆனால் திட்டமிட்ட முதலீட்டால் சமாளிக்கலாம்.
மாதம் ரூ.2,000 எனும் மிகச்சிறிய தொகையில் சரியாக திட்டமிட்டு ரூ. 1 கோடி எளிதாக சேமிக்க முடியும். சிப் நமது கனவை நிஜமாக்கும் ஒரு கருவியாக பார்க்கப்படுகிறது.