Thug Life : எதிர்பார்க்காத விஷயம்.. ‘தக் லைஃப்’ ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?
Kamal Haasan And Silambarasans Thug Life Movie : தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் எழுத்திலும் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்திலும் உருவாகியுள்ள பான் இந்தியப் படம் தக் லைஃப். இந்த கடந்த 2025, மே 17ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் ட்ரெயிலரின் இடம் பெற்றிருக்கும் விஷயமானது, ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

நடிகர்கள் சிலம்பரசன் (Silambarasan) மற்றும் கமல் ஹாசனின் (kamal Haasan) முன்னணி நடிப்பில் தயாராகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தைக் கோலிவுட் முன்னணி இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதையை நடிகர் கமல் ஹாசன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கூட்டணியில் இந்த தக் லைஃப் படமானது மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது. இதில் நடிகர்கள் சிலம்பரசன், கமல் ஹாசன், த்ரிஷா கிருஷ்ணன் (risha Krishnan) , அபிராமி (Abhirami), சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் என பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் தொடங்கி, இந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வந்த நிலையில் வரும் 2025, ஜூன் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 2025, மே 17ம் தேதியில் மாலையில் வெளியாகியிருந்தது.
இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிகை அபிராமி மட்டும் நடித்துள்ளார் என்று நினைத்த நிலையில், அதை தொடர்ந்து நடிகை த்ரிஷாவுடன் இருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த விஷயம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
படக்குழு வெளியிட்ட தக் லைஃப் ட்ரெய்லர் :
#ThuglifeTrailer Out Now
➡ https://t.co/Xy1tm87OuO#Thugfluencers#ThuglifeAudioLaunch from May 24#Thuglife#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR #IMAX
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers… pic.twitter.com/rhp4PAmetE— Raaj Kamal Films International (@RKFI) May 17, 2025
தக் லைஃப் ட்ரெய்லரில் கவனிக்கவேண்டிய விஷயம் :
இந்த தக் லைஃப் படத்தின் ட்ரெய்லரில் ஆரம்பத்திலே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காட்சி என்றால், நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகை அபிராமி இறுக்கும் காட்சிதான் என்று கூறலாம். மேலும் இதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் கமல் ஹாசனின் அல்ல, கமலால் வளர்க்கப்பட்டவர் என்று தெரிகிறது. மேலும் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இந்த படத்தில் நடித்துள்ளார் என்று நினைக்கப்பட்ட நிலையில், அவரும் நடிகர் கமலுடன் நெருங்கிய காட்சிகளில் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த படத்தில் வில்லன் யார் மற்றும் ஹீரோ யாரை என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை, இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் எதிர் எதிராக இருக்கிறார்கள் என்பது ட்ரெய்லரில் தெளிவாகப் புரிகிறது. மேலும் இந்த படத்தில் கமல் மற்றும் சிம்பு இருவரும் ஆக்ஷ்ன் காட்சிகளில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படமானது பான் இந்திய அளவிற்கு நிச்சயம் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் குறித்ததுதான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.