Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழக வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! சொல்கிறார் பிரதீப் ஜான்

Tamil Nadu Weather Alert:தமிழக கடலோரப் பகுதியில் உருவாகியுள்ள மேல் காற்று சுழற்சி காரணமாக காற்றின் போக்கு மாறி, வட மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடக எல்லைகளில் காற்று சந்திப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கிலிருந்து மேகங்கள் நகர்ந்து வடகிழக்கு பருவமழையை நினைவுபடுத்துகின்றன. கடல் காற்று வெப்பத்தை கட்டுப்படுத்தினாலும் ஈரப்பதம் அதிகமாகும்.

தமிழக வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! சொல்கிறார் பிரதீப் ஜான்
தமிழக கடற்கரைக்கு அருகில் மேலடுக்கு சுழற்சிImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 18 May 2025 09:43 AM

தமிழ்நாடு மே 18: தமிழக கடற்கரைக்கு அருகில் மேலடுக்கு சுழற்சி (Upper Air Circulation) உருவானதால், காற்று போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் காற்று சந்திப்பு வடக்கு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடக எல்லைகளில் ஏற்பட்டுள்ளது. மேகங்கள் கிழக்குத் திசையிலிருந்து நகர்வது, வடகிழக்கு பருவமழையை நினைவுபடுத்துகிறது. கடல் திசை காற்றால் வெப்பம் கட்டுப்பாட்டில் இருக்கும்; ஆனால் ஈரப்பதம் அதிகமாகும். சென்னையில் வெப்பநிலை சாதாரணத்தைக் காட்டிலும் குறைவாகவும், ஈரப்பதம் அதிகமாகவும் இருக்கும். 2025 மே 18 இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். (Weather Center)

தமிழக கடற்கரைக்கு அருகில் மேலடுக்கு சுழற்சி

தமிழக கடற்கரை பகுதியில் மேலடுக்கு சுழற்சி (Upper Air Circulation) தீவிரமாக அருகில் வந்துள்ளதால், காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் காற்று சந்திப்பு (கான்வர்ஜென்ஸ்) வடக்கு தமிழக மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லைக்குப் பிடிக்கும்படியாக நகர்ந்துள்ளது. மேகங்கள் கடலோரத்தில் இருந்து கிழக்குத் திசையில் நகரவேண்டும் என்பது வடகிழக்கு பருவமழையை நினைவுபடுத்தும். இதனை உறுதிப்படுத்தும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! சொல்கிறார் பிரதீப் ஜான்

வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு குறைவு

2025 மே 18 இன்று கடல் திசையிலிருந்து காற்று வீசுவதால் வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருக்கும். உலர் மேற்கு காற்று காணப்படாமல் இருப்பதால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு குறைவு. ஆனால் கிழக்கு காற்று ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், சற்று அடித்தள ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால் சென்னை நகரில் வெப்பநிலை சாதாரணத்தை விட குறைவாகவே இருக்கும். ஆனால் ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும்.

இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் நீலகிரி. இந்நிலையில், மேகச் சுழற்சி மற்றும் காற்று மாற்றம் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த 7 பயனுள்ள வழிகள்!
உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த 7 பயனுள்ள வழிகள்!...
'தக் லைஃப்' படத்தின் ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?
'தக் லைஃப்' படத்தின் ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?...
மனைவி தாலியை அடமானம் வைத்து வாங்கிய கார்.. கதறிய உரிமையாளர்
மனைவி தாலியை அடமானம் வைத்து வாங்கிய கார்.. கதறிய உரிமையாளர்...
சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு
சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு...
மாம்பழத்தோல் சாப்பிடலாமா? நன்மை, தீமை என்னென்ன?
மாம்பழத்தோல் சாப்பிடலாமா? நன்மை, தீமை என்னென்ன?...
தளபதி விஜய்யின் கட்சி குறித்த கேள்வி.. எதிர்பாராத பதிலளித்த சூரி!
தளபதி விஜய்யின் கட்சி குறித்த கேள்வி.. எதிர்பாராத பதிலளித்த சூரி!...
'சூர்யா45' படத்தில் நடிக்க இதுவே காரணம்- ஸ்வாசிகா
'சூர்யா45' படத்தில் நடிக்க இதுவே காரணம்- ஸ்வாசிகா...
சர்க்கரை அளவை குறைத்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை – CBSE அறிவுரை!
சர்க்கரை அளவை குறைத்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை – CBSE அறிவுரை!...
புதன் பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!
புதன் பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!...
சார்மினாரில் பயங்கர தீ விபத்து... உடல் கருகி 17 பேர் உயிரிழப்பு
சார்மினாரில் பயங்கர தீ விபத்து... உடல் கருகி 17 பேர் உயிரிழப்பு...
பிளே ஆஃப் கனவில் GT.. தடுத்து நிறுத்துமா DC..? மழைக்கு வாய்ப்பா?
பிளே ஆஃப் கனவில் GT.. தடுத்து நிறுத்துமா DC..? மழைக்கு வாய்ப்பா?...