Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: பிளே ஆஃப் கனவில் குஜராத்.. தடுத்து நிறுத்துமா டெல்லி..? மழைக்கு வாய்ப்பா..?

Delhi Capitals vs Gujarat Titans: மே 18, 2025 அன்று டெல்லியில் நடைபெறும் IPL 2025 இன் 60வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானம் மற்றும் இரு அணிகளுக்கிடையேயான சமமான ஹெட்-டு-ஹெட் சண்டை ஆகியவை இந்தப் போட்டியின் முக்கிய அம்சங்கள் உள்ளன. பிளே-ஆஃப் தகுதிக்கான போராட்டத்தில் இந்தப் போட்டி மிக முக்கியமானதாகும்.

IPL 2025: பிளே ஆஃப் கனவில் குஜராத்.. தடுத்து நிறுத்துமா டெல்லி..? மழைக்கு வாய்ப்பா..?
சுப்மன் கில் - அக்சர் படேல்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 18 May 2025 11:28 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 60வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 18ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியும், குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற வேண்டும் என்று சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முயற்சிக்கும். அதேநேரத்தில், குஜராத் அணியை தோற்கடித்து பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துகொள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி விரும்பும். இந்தநிலையில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட், டெல்லி பிட்ச் ரிப்போர்ட் மற்றும் பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.

டெல்லி பிட்ச் ரிப்போர்ட்:

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பிட்சானது பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இங்கு பவுண்டரி லைன் சிறியது என்பதால், அதிக ஸ்கோர் அடிக்க இரு அணிகளுக்கும் வாய்ப்புள்ளது. 190 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட ஸ்கோரை விரட்டுவது இங்கு சற்று கடினமாக விஷயம். கடந்த சில நாட்களாக டெல்லியில் மழை பெய்தாலும், இன்றைய ஆட்டத்தை பாதிக்க வாய்ப்பில்லை. எனவே, டாஸ் வெல்லும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இலக்கை துரத்தலாம்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இதுவரை 93 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 45 போட்டிகளிலும், 2வதாக பேட்டிங் செய்த 47 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 6 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இரண்டு அணிகளும் தலா 3 முறை வெற்றியை பதிவுசெய்துள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெறுபவர்கள் முன்னிலை பெறுவர்.

வானிலை எப்படி..?

2025 மே 18ம் தேதியான இன்று டெல்லியில் வானம் தெளிவாக இருக்கும். வெப்பநிலை சுமார் 36°C ஆக இருக்கும் என்றும் மிக முக்கியமாக, 0 சதவீதம் கூட மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, முழு போட்டியையும் ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

டெல்லி கேபிடல்ஸ் அணி:

ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார், டி நடராஜன்.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான் , ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷத் கான், ஆர் சாய் கிஷோர்.

புதிய ரூ.20 நோட்டை அறிமுகம் செய்த ஆர்பிஐ!
புதிய ரூ.20 நோட்டை அறிமுகம் செய்த ஆர்பிஐ!...
இபிஎஃப்ஓவில் வந்த மூன்று முக்கிய மாற்றங்கள் - முழு விவரம்!
இபிஎஃப்ஓவில் வந்த மூன்று முக்கிய மாற்றங்கள் - முழு விவரம்!...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த ஐஸ்வர்யா லட்சுமி!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த ஐஸ்வர்யா லட்சுமி!...
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் அட்டாக் செய்யப்போகும் மழை..!
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் அட்டாக் செய்யப்போகும் மழை..!...
ரீல்ஸ் மூலம் ரசிகர்களைக் கவரும் நடிகை ஸ்ரீலீலா!
ரீல்ஸ் மூலம் ரசிகர்களைக் கவரும் நடிகை ஸ்ரீலீலா!...
ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. RCB பிளே ஆஃப்க்கு செல்லுமா?
ஆண்டுதோறும் மே 18 அதிர்ஷ்டம்தான்.. RCB பிளே ஆஃப்க்கு செல்லுமா?...
எதை தொட்டாலும் தடையாக இருக்கா? புதன்கிழமை இப்படி வழிபாடு பண்ணுங்க
எதை தொட்டாலும் தடையாக இருக்கா? புதன்கிழமை இப்படி வழிபாடு பண்ணுங்க...
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்...
பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி!
பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி!...
உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த 7 பயனுள்ள வழிகள்!
உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த 7 பயனுள்ள வழிகள்!...
'தக் லைஃப்' படத்தின் ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?
'தக் லைஃப்' படத்தின் ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?...