Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் இருந்து விலகும் இந்திய அணி.. புறக்கணிப்பதாக பிசிசிஐ முடிவு..!

India-Pakistan Tensions: பிசிசிஐ, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அரசியல் பதற்றத்தின் காரணமாக, 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் பங்கேற்பை ரத்து செய்துள்ளது. இந்த முடிவு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் பெண்கள் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கோப்பையும் புறக்கணிக்கப்படும். இந்த முடிவு, ஆசியக் கோப்பையின் எதிர்காலம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் இருந்து விலகும் இந்திய அணி.. புறக்கணிப்பதாக பிசிசிஐ முடிவு..!
இந்தியா - பாகிஸ்தான்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 May 2025 10:51 AM

ஆசிய கோப்பையில் (Asia Cup) இந்திய அணி (Indian Cricket Team) பங்கேற்பது குறித்து பிசிசிஐ மிகப்பெரிய முடிவு எடுத்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐயின் முடிவின்படி, இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்காது என்றும், பிசிசிஐ இந்த முடிவை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற 2025 ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் மகளிர் வளர்ந்து வரும் ஆசிய கோப்பையையும் பிசிசிஐ (BCCI) புறக்கணிக்கும். செப்டம்பரில் நடைபெறும் ஆண்கள் ஆசியக் கோப்பையிலிருந்து இந்திய அணி நிச்சயமாக வெளியேற முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தற்போது பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி தலைமையில் உள்ளது. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்டை தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிசிசிஐ வட்டாரம் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தான் அமைச்சர் தலைமையிலான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி விளையாட முடியாது. இது நாட்டின் உணர்வு. வரவிருக்கும் பெண்கள் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பையில் இருந்து நாங்கள் விலகுவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு வாய்மொழியாக தெரிவித்துள்ளோம். மேலும், ஆசியக் கோப்பை நிகழ்வுகளில் எங்கள் எதிர்கால பங்கேற்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்திய மத்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆண்கள் ஆசியக் கோப்பை:

வருகின்ற 2025 ஆசியக் கோப்பை செப்டம்பர் மாதம் ஆண்கள் ஆசியக் கோப்பை நடைபெறவுள்ளது. இது இந்தியாவில் நடத்தப்படும். பிசிசிஐயின் இந்த அணுகுமுறையால், இந்த போட்டியின் ஏற்படும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை இப்போதைக்கு ஒத்திவைக்கலாம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெரும்பாலான ஸ்பான்சர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால், இந்தியா இல்லாமல் ஆசிய கோப்பையை ஏற்பாடு செய்வது சாத்தியவில்லை. மேலும், இந்தியா-பாகிஸ்தான் போட்டி இல்லாமல், ஒளிபரப்பாளர்கள் ஆசிய கோப்பையில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.2024 ஆசியக் கோப்பைக்கான உரிமைகளை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) அடுத்த 8 ஆண்டுகளுக்கு 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளது. இந்தப் போட்டி நடக்கவில்லை என்றால், ஒப்பந்தத்தில் சில மாற்றங்களும் சாத்தியமாகும்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையின் முந்தைய பதிப்பும் இந்தியா-பாகிஸ்தான் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டது. அப்போது போட்டியை நடத்தியது பாகிஸ்தான், ஆனால் இந்தியா அங்கு செல்ல மறுத்துவிட்டது. அதன் பிறகு இந்திய அணி தனது போட்டிகளை இலங்கையில் விளையாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு வர முடியவில்லை, கொழும்பில் இலங்கைக்கு எதிரான பட்டப் போட்டியில் இந்தியா வென்றது.

வாழ்க்கையில் இந்த 7 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க!
வாழ்க்கையில் இந்த 7 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க!...
சென்னையில் அமலுக்கு வரும் குடிநீர் ஏ.டி.எம்.. எப்போது? எங்கே?
சென்னையில் அமலுக்கு வரும் குடிநீர் ஏ.டி.எம்.. எப்போது? எங்கே?...
வீட்டில் எறும்பு தொல்லை இருக்கா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!
வீட்டில் எறும்பு தொல்லை இருக்கா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!...
இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த 10 பேர் கைது
இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த 10 பேர் கைது...
நிலையான வைப்பு நிதி கடன் - இத்தனை சிறப்பு அம்சங்களா?
நிலையான வைப்பு நிதி கடன் - இத்தனை சிறப்பு அம்சங்களா?...
சுவருக்குள் நடுவில் சிக்கிக்கொண்ட மூதாட்டி.. மீட்ட தீயணைப்பு துறை
சுவருக்குள் நடுவில் சிக்கிக்கொண்ட மூதாட்டி.. மீட்ட தீயணைப்பு துறை...
மாதம் ரூ.2,800 முதலீடு - வட்டியாக மட்டும் ரூ.31,824 கிடைக்கும்!
மாதம் ரூ.2,800 முதலீடு - வட்டியாக மட்டும் ரூ.31,824 கிடைக்கும்!...
உஷார்.. உயிருக்கே ஆபத்தாகும் உயர் ரத்த அழுத்தம்!
உஷார்.. உயிருக்கே ஆபத்தாகும் உயர் ரத்த அழுத்தம்!...
'தக் லைஃப்' செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
'தக் லைஃப்' செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?...
திமுக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை அமைக்கும் - திருமாவளவன்
திமுக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை அமைக்கும் - திருமாவளவன்...
குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் ஆதார் அப்டேட் அவசியம்
குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் ஆதார் அப்டேட் அவசியம்...