Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: குருபெயர்ச்சி மாற்றம்.. இந்த 6 ராசிக்கு எதிர்பாராத யோகம்!

2025 மே 14 ஆம் தேதி நிகழ்ந்த குரு பெயர்ச்சி ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாறியது. இதனால் 12 ராசிகளிலும் குழந்தைப் பேறு, கல்வி, வேலை, திருமணம் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசிகளின் குழந்தைகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

Astrology: குருபெயர்ச்சி மாற்றம்.. இந்த 6 ராசிக்கு எதிர்பாராத யோகம்!
ஜோதிடப்பலன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 May 2025 17:38 PM

ஜோதிடத்தைப் பொறுத்தவரை கிரகங்களின் பெயர்ச்சி என்பது மிக முக்கியமானது. இது தனி மனித வாழ்க்கையுடன் தொடர்புடையது. இப்படியான நிலையில் கடந்த 2025, மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சி நடைபெற்றது. ரிஷப ராசியில் இருந்த குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குழந்தைப் பேறு, குழந்தை வளர்ச்சி, கல்வி, வேலைகள், திருமணம் போன்றவற்றில் நிச்சயம் மாற்றமிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஜூன் மாதம் வரை குரு பகவான் மிதுன ராசியில் இருப்பார். இதனிடையே இந்த பெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ராசிக்காரர்களின் குழந்தைகள் மிகச்சிறந்த பலன்களைக் காணப் போகிறார்கள். அதனைப் பற்றிக் காணலாம்.

  1. ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் வருகை காரணமாக குடும்பத்தில் குழந்தைபேறு தொடர்பான சுப செய்திகள் வர வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும் காலம் வந்து விட்டது. உங்கள் குழந்தைகளைப் பற்றிய நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நிலைத் தன்மை ஏற்படும். படிப்பில் நீங்கள் பெரும் வெற்றியைப் பெறுவீர்கள். வேலையில் உயர் பதவிகளைப் பெற வாய்ப்புள்ளது. ராசிக்காரர்களின் திறமைகள் வெளிப்படும்.  புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சிறிது முயற்சி செய்தால்  பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.
  2. மிதுனம்: குரு இந்த ராசியில் சஞ்சரிப்பதால், ராசிக்காரர்களுக்கு குழந்தைப் பேறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் உங்களைப் பின்பற்றி நடப்பார்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது.  படிப்பில் சாதனை படைக்கும் அளவிலான வெற்றியை அடைவீர்கள். எதிர்பார்ப்புகளை விட அதிக வளர்ச்சி உண்டாகும்.  நெருங்கிய உறவினர்களுடன்  திருமண உறவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.
  3. சிம்மம்: இந்த ராசியின் சுப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால், குழந்தைகள் செழித்து வளர வாய்ப்பு உள்ளது. படிப்பில் மட்டுமல்ல, தொழில் மற்றும் வேலைகளிலும் எதிர்பார்ப்புகளை விட குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் விஷயத்தில் நன்மைகள் பெருமளவில் அதிகரிக்கும். முக்கியமான நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். திருமணம் மற்றும் குழந்தைகள் தொடர்பான வேலை முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
  4. துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் சுப ஸ்தான சஞ்சாரம் காரணமாக நிச்சயமாக குழந்தைப் பேறு கிடைக்கும். பிள்ளைகள் பெற்றோரின் வழிகாட்டுதலைப் பெறுவார்கள். குழந்தைகளிடம் ஒழுக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் தாங்கள் விரும்பிய வெற்றியை அடைவார்கள். படிப்பிலும் திறன்களை வளர்ப்பதிலும் ஆர்வம் பெரிதும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். வீட்டில்  சுப நிகழ்வுகள் நடைபெறும்.
  5. தனுசு: குரு இந்த ராசியின் ஏழாவது வீட்டில் சஞ்சரிப்பது, குழந்தைப் பேறு இல்லாத பிரச்சனையிலிருந்து விடுபட உங்களுக்கு உதவும். குழந்தைகள் நன்றாக வளர்வார்கள். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அதற்கான தீர்வு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். குழந்தைகள் விஷயத்தில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குழந்தைகளில் ஒருவருக்கு நிச்சயமாக வெளிநாட்டு வருமானம் இருக்கும். படிப்புகளில் சாதனைகள் படைப்பீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.
  6. கும்பம்: குரு இந்த ராசியின் ஐந்தாவது வீட்டில்  சஞ்சரிப்பது குழந்தைகளுக்கு நன்மை பயக்கும். குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். குழந்தைகள் சம்பந்தமாக வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.  படிப்பு, தொழில் மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் சூழல் உண்டாகும்.  குழந்தைகளுக்கு நல்ல திருமண வரன் அமையும்.

(இணையத்தில் ஜோதிட அடிப்படையிலான தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

உஷார்.. உயிருக்கே ஆபத்தாகும் உயர் ரத்த அழுத்தம்!
உஷார்.. உயிருக்கே ஆபத்தாகும் உயர் ரத்த அழுத்தம்!...
'தக் லைஃப்' செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
'தக் லைஃப்' செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?...
திமுக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை அமைக்கும் - திருமாவளவன்
திமுக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை அமைக்கும் - திருமாவளவன்...
குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் ஆதார் அப்டேட் அவசியம்
குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் ஆதார் அப்டேட் அவசியம்...
விஜய் ஆண்டனியின் '26வது படம்'.. டைட்டில் என்ன தெரியுமா?
விஜய் ஆண்டனியின் '26வது படம்'.. டைட்டில் என்ன தெரியுமா?...
ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாடாதா? பிசிசிஐ செயலாளர் விளக்கம்
ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாடாதா? பிசிசிஐ செயலாளர் விளக்கம்...
குருபெயர்ச்சி மாற்றம்.. இந்த 6 ராசிக்கு எதிர்பாராத யோகம்!
குருபெயர்ச்சி மாற்றம்.. இந்த 6 ராசிக்கு எதிர்பாராத யோகம்!...
சினிமாவில் 30 வருடத்தை நிறைவு செய்த இயக்குநர் சுந்தர்.சி!
சினிமாவில் 30 வருடத்தை நிறைவு செய்த இயக்குநர் சுந்தர்.சி!...
மாணவர்களுக்கு 55% வரை தள்ளுபடியில் சிறந்த லேப்டாப்கள்
மாணவர்களுக்கு 55% வரை தள்ளுபடியில் சிறந்த லேப்டாப்கள்...
இந்தியா சத்திரம் அல்ல - இலங்கை தமிழரின் வழக்கில் நீதிமன்றம்
இந்தியா சத்திரம் அல்ல - இலங்கை தமிழரின் வழக்கில் நீதிமன்றம்...
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ்...
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தனுஷ்......