Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் ஆபத்து – எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

Be Aware of Copper Utensils : காப்பர் எனப்படும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு நல்லது என நாம் படித்திருப்போம். ஆனால் செம்பு பாத்திரத்தில் பால் அருந்தக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். செம்பு பாத்திரத்தில் பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை அருந்துவதால் அது உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் ஆபத்து – எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 20 May 2025 22:41 PM

காப்பர் (Copper) எனப்படும் தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால், பால் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? எந்தவொரு திரவத்தையும் செம்பு பாத்திரத்தில் சேமித்து குடிப்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக ஆயுர்வேத (Ayurveda) மருத்துவ நிபுணர்களும் சரி நமது முன்னோர்களும் சரி  காப்பர் எனப்படும் செம்பு பாத்திரத்தில் அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள். ஆனால் செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் உடலுக்கே ஆபத்தானது என சமீபத்தில் தெரியவந்துள்ளது.

பால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், எப்போது குடிக்க வேண்டும்? எவ்வளவு குடிக்க வேண்டும் என்பது பற்றி பல தகவல்கள் நிலவுகின்றன. இந்த சூழலில், பால் குடிப்பதை விட அவற்றை எதில் குடிக்கிறோம் மிகவும் முக்கியமானது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். செம்பு கோப்பையில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். ஆனால் அதே நேரம் செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கிறார்கள்.

செம்பு பாத்திரத்தில் பால் அருந்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

செம்பு  பாத்திரத்தில் சேமித்து வைத்த தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கியமானது. ஆனால், அத்தகைய செம்பு பாத்திரத்தில் உட்கொள்ளக் கூடாத சில உணவுப் பொருட்களும் உள்ளன. எந்த சூழ்நிலையிலும் பால் மற்றும் அது தொடர்புடைய பொருட்களை செம்பு பாத்திரங்களை சேமிக்க கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பால் அல்லது அதன் பொருட்களை செம்புப் பாத்திரத்தில் நீண்ட நேரம் சேமித்து வைப்பது நல்லதல்ல. பாலில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுடன் தாமிரம் வினைபுரிய தொடங்குகிறது. இதனையடுத்து அந்த பாலை நாம் பருகும்போது அது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

பாலுடன் வினைபுரியும் தாமிர உலோகம்

தாமிரம் என்பது ஒரு உலோகம். எனவே, அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட பாத்திரங்கள் மற்றும் டம்ளர்களில் பால் உட்கொள்வது வாந்தி மற்றும் பதட்டம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பால் மட்டுமல்லாமல் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட மோர் மற்றும் தயிரை செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்து உட்கொள்வது கூட எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக, அவை செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பால் அல்லது தயிரை செம்பு பாத்திரங்கள்  சேமிக்கும்போது கவனமாக இருப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

காரணம், தாமிரம் பாலின் அமிலக் கூறுகளுடன் வினைபுரிகிறது. குறிப்பாக பால் சிறிது புளிப்பாகவும், செம்பு பாத்திரத்தில் நீண்ட நேரம் வைத்திருந்தாலும், அது வினைபுரிந்து  செரிமான பிரச்சனைகள், குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

ராஜஸ்தான் அபார வெற்றி - தல தோனியிடம் ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி
ராஜஸ்தான் அபார வெற்றி - தல தோனியிடம் ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி...
ஹீமோகுளோபினை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்!
ஹீமோகுளோபினை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்!...
உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள்!
உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள்!...
செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் ஏற்படும் பிரச்னைகள்!
செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் ஏற்படும் பிரச்னைகள்!...
பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையில் கலக்கிய பெண்!
பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையில் கலக்கிய பெண்!...
நெடுஞ்சாலையில் காரில் சென்றவருக்கு நடந்த பயங்கரம் - வைரல் வீடியோ!
நெடுஞ்சாலையில் காரில் சென்றவருக்கு நடந்த பயங்கரம் - வைரல் வீடியோ!...
அலாரத்தை ஸ்நூஸ் செய்து தூங்குறீங்களா? மூளையை கடுமையாக பாதிக்கும்
அலாரத்தை ஸ்நூஸ் செய்து தூங்குறீங்களா? மூளையை கடுமையாக பாதிக்கும்...
ஐபிஎல்லில் தொல்லை தரும் மழை.. புதிய விதியை அமல்படுத்திய பிசிசிஐ!
ஐபிஎல்லில் தொல்லை தரும் மழை.. புதிய விதியை அமல்படுத்திய பிசிசிஐ!...
15 நிமிடத்தில் இந்திய ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?
15 நிமிடத்தில் இந்திய ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?...
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?...
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!...