Viral Video : கழிவுநீர் தொட்டியில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கணக்கான பாம்பு குட்டிகள்.. ஷாக் சம்பவம்!
Hundreds of Venomous Snakes Found in Toilet Tank | ஒரு பாம்பை கண்டாலே படையும் நடுங்கும் என்ற நிலையில், கழிவுநீர் தொட்டியில் ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விஷ பாம்பு குட்டிகள் கூடி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

பொதுவாக பாம்பு என்றாலே படையும் நடுங்கும். ஒரு பாம்புக்கே இப்படி என்றால் ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தால் எப்படி இருக்கும். அப்படிபட்ட ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. புதியதாக கட்டப்பட்ட வீட்டின் கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் நூற்றுக்கணக்கான விஷ பாம்பு குட்டிகள் இருந்ததை கண்டு வீட்டின் உரிமையாளர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த பாம்புகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது வீட்டின் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
உத்தர பிரதேசத்தில் உள்ள மஹாராஜ்கஞ்ச் என்ற பகுதியில் புதியதாக கட்டப்பட்ட வீட்டின் கழிவறை தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் வீட்டின் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார். அப்போது தொட்டியில் இருந்து வினோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த நபர் கழிவறை தொட்டியை திறந்து பார்த்துள்ளார். தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்த நிலையில், அவர் டார்ச் லைட் கொண்டு தொட்டியில் தேடியுள்ளார். அப்போது அங்கிருந்த நூற்றுக்கணக்கான விஷ பாம்பு குட்டிகளை கண்டு அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
கழிவறை தொட்டியில் குவிந்து கிடந்த விஷ பாம்பு குட்டிகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ
यूपी से दिल दहला देने वाली तस्वीर आई सामने, दहशत में पूरा इलाका !!
महराजगंज में जहरीले सांपों से भरी मिली टंकी !!सोनौली कोतवाली क्षेत्र के हरदी डाली चौराहे पर वीरेंद्र गुप्ता के नवनिर्मित मकान के शौचालय की टंकी में सांपों का एक झुंड पाया गया. स्थानीय लोगों के मुताबिक, जब शौचालय… pic.twitter.com/GrK48zEdaC
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) May 20, 2025
கழிவுநீர் தொட்டியில் நூற்றுக்கணக்கான பாம்புகள் இருக்கும் தகவல் அறிந்து அந்த அபகுதி மக்கள் அங்கு ஒன்று கூடியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறிந்த தகவல் அளித்த நிலையில், நீண்ட நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கொசு வலை கொண்டு பாம்புகளை மீட்டுள்ளனர். மக்கள் கூட்டம் அந்த வீட்டின் முன்பு கூடிய நிலையில், போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் பாம்புகள் அப்புறப்படுத்தப்பட்டன.